ரஜினி படத் தயாரிப்பாளர் மருத்துவமனையில் அனுமதி.. மூச்சுவிடுவதில் சிரமம்..

ரஜினிகாந்த், அனுஷ்கா, சோனாக்‌ஷி சின்ஹா நடித்த லிங்கா, விக்ரம் நடித்த மஜா, சிம்பு நடித்த தம் போன்ற படங்களை தயாரித்தவர் ராக்லைன் வெங்கடேஷ். கன்னடத்தில் பல்வேறு படங்களைத் தயாரித்திருக்கிறார். இவர் உடல் நலக் குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டதால் சிகிச்சை பெறுவதாகத் தெரிகிறது. அவரது மகன் அபிலேஷ் தொழில்முறை டாக்டராக இருக்கிறார். அவர் தந்தையின் உடல்நிலையைக் கவனித்து வருகிறார்.

ராக்லைன் வெங்கடேஷ் சமீபத்தில் அரசியல்வாதியும் நடிகருமான சுமலதா அம்பரீஷுடன் சந்தித்து அவருடன் இணைந்து சென்று கர்நாடக முதல்வர் எடியூரப்பாவைச் சந்தித்துப் பேசினார். கணவர் அம்பரீஷின் நினைவு இல்லம் அமைப்பது தொடர்பாக முதல்வரிடம் சுமலதா பேசினார். இந்நிலையில் நேற்று முன்தினம் சுமலதா கொரோனா வைரஸசால் பாதிக்கப்பட்டது தெரிந்தது. அவரை சந்தித்த ராக்லைன் வெங்க டேஷூக்கும் கொரோனா வைரஸின் அறிகுறிகள் தென்பட்டதாகவும் அதனால் அதற்காக அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் அவருக்கு கொரோனா வைரஸ் இருந்ததா என்பது பற்றி தகவல் எதுவும் இல்லை.

கன்னடத்தில் ராக்லைன் வெங்கடேஷ் பெல்லி மொடகலு என்ற படத்தை முதல் முதன்முதலாகத் தயாரித்தார். அப்படத்தில், ரமேஷ் அரவிந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். பொலிஸ் ஸ்டோரி, கில்லிங் வீரப்பன், நாச்சியார் போன்ற படங்களில் வெங்கடேஷ் நடித்தும் இருக்கிறார். தற்போது தர்ஷன் நடிக்கும் கன்னட படத்தைத் தயாரித்து வருகிறார். தேசிய விருது பெற்ற சல்மான்கானின் பஜ்ரங்கி பைஜான் என்ற இந்தி படத்தை வெங்கடேஷ் இணைந்து தயாரித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News >>