அதிரிபுதிரி அரசியல்வாதியாக மாஸ் காட்டும் விஜய் சேதுபதி.. துக்ளக் தர்பார் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்..

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஜய் சேதுபதி நடித்திருக்கும் துக்ளக் தர்பார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது. விஜய் சேதுபதி தனது இணைய தள பக்கத்தில் இதை வெளியிட்டார்.இப்படத்தில் விஜய் சேதுபதி ஒரு அரசியல்வாதியாக நடிக்கிறார். அதிரிபுதிராக நடவடிக்கைகள் எடுத்து அனைவரையும் ஆட்டிவிக்கும் வித்தியாசமான பாத்திரத்தில் அதிரடி கிளப்ப உள்ளாராம் விஜய் சேதுபதி. சமகால அரசியலை அக்குவேறு ஆணிவேராக பிய்க்க உள்ளாராம். இது முற்றிலும் மாஸ் கமர்ஷியல் கதையாக உருவாகிறது.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், விஜய் சேதுபதி மாஸாக சிரித்தபடி போஸ் தந்திருக்கிறார். பட இயக்குனர் தீனதாயலும் இணையதள பக்கத்தில் போஸ்டரை வெளியிட்டிருக்கிறார். 'சில்லுனு ஒரு காதல் ' கிருஷ்ணா, 'நடுவுல கொஞ்சம் பக்காத்த காணோம்' பாலாஜி தரணிதரன் மற்றும் '96' பட இயக்குனர் பிரேம் குமார் ஆகியோருடன் பணியாற்றியுள்ளார் தீனதாயாள். '96' படத்திற்கான இணை இயக்குநராக இருந்தார். துக்ளக் தர்பாருக்கான வசனங்களை பாலாஜி தரணிதரன் எழுதியுள்ளார், படத்திற்கு இசை கோவிந்த் வசந்தா. மனோஜ் பரமஹம்சா கேமராவை பொறுப்பு ஏற்றிருக்கிறார். அதிதி ராவ் ஹைத்ரி ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் நடிகர்கள் பார்த்திபன், கருணாகரன் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

More News >>