ஆன்லைன் சிலம்ப போட்டி: நாசரேத் மாணவர்கள் வெற்றி
நாசரேத் ஆலன் திலக் கராத்தே பள்ளி மாணவர்கள் ஆன்லைன் சிலம்ப போட்டியில் வெற்றி பெற்றனர்.
சிலம்பம் தென் இந்தியா சார்பில் ஆன்லைன் சிலம்ப போட்டி நடைபெற்றது. நெடு கம்பு சுத்து, இரட்டை கம்பு சுத்து, ஒற்றை வாள் சுத்து, இரட்டை வாள் சுத்து,ஒற்றை சுருள் வாள் சுத்து, இரட்டை சுருள் வாள் சுத்து, தீ பந்தம் சுத்து, வேல் கம்பு சுத்து, மான் கம்பு சுத்து, கை சிலம்பம் போன்ற முறைகளை இரண்டு நிமிடம் முதல் நான்கு நிமிடங்களுக்குள் இருக்குமாறு காணொளியில் பதிவு செய்து 21.06.2020 தேதிக்குள் அனுப்ப அறிவிக்கப்பட்டிருந்தது.
தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, மகாராஷ்டிரா, டெல்லி ஆகிய மாநிலங்களில் இருந்து பல மாணவர்கள் இந்த ஆன்லைன் போட்டியில் பங்கு பெற்றனர். இதில் நாசரேத் ஆலன் திலக் கராத்தே பள்ளி மாணவர்கள் ஆன்லைன் சிலம்ப போட்டியில் கலந்து கொண்டனர். கடந்த 26.06.2020 அன்று போட்டியின் முடிவுகளை சிலம்பம் தென் இந்தியா நடுவர்கள் வெளியிட்டு பதக்கங்கள் சான்றிதழ்களை அனுப்பி வைத்தனர்.
இந்த சிலம்ப போட்டியில் 10 வயதுக்குள் பிரிவில் பிரின்சிலின் சாம் முதல் பரிசு மற்றும் 11-19 வயது பிரிவில் டால்யா இரண்டாம் பரிசு பெற்றனர்.
இவர்களுக்கு பயிற்சி அளித்த ஆலன் திலக் கராத்தே மாஸ்டர் டென்னிசன் நடத்திய சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் ஆழ்வை ஓன்றிய அம்மா பேரவை செயலாளர் ஞானையா, பேருராட்சி கழக செயலாளர் கிங்சிலி மற்றும் பலர் கலந்து கொண்டு பாராட்டினர்.