குடிக்க,புகைக்க மாட்டேன் சிவகார்த்திகேயன் பேச்சு ரிலீஸ்.. போலீஸ் அதிகாரி செய்த வேலை..
சமீபகாலமாக திரைப்படங்களில் குடிக்கும், புகைப்பிடிக்கும் காட்சிகள் குறைந்திருக்கின்றன. அதற்குக் காரணம் பல்வேறு அரசியல் தலைவர்கள் சமூக அமைப்புகள் நடிகர்களிடம் அதுபோன்ற காட்சிகளைப் படங்களில் வைக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதும் ஒரு காரணம் ஆகும். பெரும்பாலான ஹீரோக்கள் குடிக்கும், புகைக்கும் காட்சிகளை தவிர்த்து விடுகிறார்கள். நடிகர் சிவகார்த்திகேயன் நிஜத்தில் குடிப்பதும் இல்லை, புகைப்பதும் இல்லை. படங்களிலும் அதுபோன்ற காட்சிகளில் பெரும் பாலும் நடிப்பதில்லை அதற்குக் காரணம் கூறியிருக்கிறார்.
நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியபோது, நான் இதுவரை சிகரெட் பிடித்ததில்லை, மது குடித்ததில்லை எனக்கு அமைந்த நண்பர்கள் அப்படி. குடிக்கச் சொல்லியோ, புகைபிடிக்கச் சொல்லியோ அவர்கள் என்னை ஒருபோதும் வற்புறுத்தியது கிடையாது. அப்பா. அம்மா சம்பாதிக்கும் காசை சிகரெட்டுக்கும் மதுவுக்கும் செலவிட்டு உங்கள் உடலை கெடுத்துக் கொள்ளாதீர்கள் என குறிப் பிட்டிருக்கிறார்.
நெல்லை துணை கமிஷனர் அர்ஜுன் சரவணன் நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்ட இந்த பேச்சின் வீடியோவை வெளியிட்டு, நட்சத்திரங்கள் சொல்வதை அப்படியே கேட்பவர்கள் என்றால் இதனையும் கொஞ்சம் கேளுங்கள். குடிக்க , புகைக்க எந்த நண்பனும் அழைக்க மாட்டான், அப்படி அழைப்பவர் நட்பிலிருந்து வெளியேறுங்கள். அவன் உங்களை உலகிலிருந்து வெளியேற அழைக்கிறான். என்று தனது கருத்தையும் சேர்த்து மெசேஜாக வெளியிட்டிருக்கிறார். சிவகார்த்திகேயன் தற்போதுஅயலான், டாக்டர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.