கர்ப்பிணி உஷா உயிரிழந்த சம்பவம்... மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

திருச்சி அருகே போக்குவரத்து காவல் ஆய்வாளர் அத்துமீறலால் கர்ப்பிணி உஷா உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அதில், “பத்திரிகை செய்தியில் உள்ளது உண்மையெனில், இது போலீஸ் அராஜகத்துக்கு மோசமான உதாரணம். அந்த அப்பாவி பெண்ணின் வாழும் உரிமை மீறப்பட்டுள்ளது.

காவல்துறை ஆய்வாளர் மீது கடும் நடவடிக்கை எடுப்பது அவசியம். பணியின்போது பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்ளுமாறு காவல்துறையினருக்கு டி.ஜி.பி. அறிவுறுத்த வேண்டும் என்று ஆணையம் எதிர்பார்க்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தச் சம்பவம் குறித்து நான்கு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது. அத்துடன், சம்பந்தப்பட்ட காவல்துறை ஆய்வாளர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை, உயிர்ழந்த கர்ப்பிணி பெண்ணின் குடும்பத்துக்கு அளிக்கப்பட்ட நிதி உதவி, அவருடைய கணவரின் உடல்நிலை ஆகியவற்றை பற்றியும் தெரிவிக்குமாறு கூறியுள்ளது.

More News >>