பாலசந்தர் 90வது பிறந்த நாளில் ரஜினி, கமல் புகழாஞ்சலி.. குரு, நண்பர், தந்தை, வழிகாட்டி தெய்வம்..

இயக்குனர் சிகரம் கே,பாலசந்தரின் 90வது பிறந்த நாள் இன்று. அவரது நினைவைப் போற்றும் வகையில் ரஜினிகாந்த் கமல்ஹாசன் வீடியோவில் பேசி இருக்கின்றனர். வீடியோவைப் பகிர்ந்த கமல், "ஒரு இளைஞனாக நான் கேள்விப்பட்ட புகழ் கொண்ட ஒரு பெயர் பாலசந்தர். என்னைப் போன்ற ஒரு நடிகரின் வாழ்க்கையில் அவர் பல வேடங்களில் நடிப்பார் என்று யார் நினைத்திருப்பார்கள். பயனாளி, வழிகாட்டி, ஒத்துழைப்பாளர். தந்தை எனப் பல பரிமாணங்களில் என் வாழ்வில் நிறைந்தார். இந்தியன் சினிமா என்ற தாயின் முக்கியமான இந்த மகனுக்கு எனது வணக்கம்.

ரஜினிகாந்த் தனது வீடியோவில், "இன்று எனது குரு கே.பி. ஐயாவின் 90வது பிறந்த நாள். அவர் என்னை அறிமுகப்படுத்தாவிட்டாலும் நான் ஒரு நடிகராகி இருப்பேன். வில்லன் வேடங்களையும், சிறிய கதாபாத்திரங்களையும் செய்வதில் நான் திருப்தி அடைந்திருப்பேன். ஆனால் நிறையப் புகழ் மற்றும் செல்வத்துடன் நான் வாழ பாலசந்தர் சார்தான் காரணம். அவர் என்னை என் எதிர்மறைகளில் பணிபுரியச் செய்தார், மேலும் எனது நேர்மறைகளை உலகுக்கும் எனக்கும் காண்பித்தார். அவர் என்னை ஒரு முழுமையான நடிகராக்கினார், நான்கு படங்களுக்கு ஒரு ஒப்பந்தத்தை கொடுத்து என்னைக் கோலிவுட்டில் அறிமுகப்படுத்தினார் . என்னைப் பெற்ற என் தாய் தந்தை, என்னை வளர்த்த என் அண்ணன், குரு நாதர் பாலசந்தர் சார் இவர்கள் நான்குபேரும் எனக்குத் தெய்வங்கள் எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

More News >>