புலம்பெயர் தொழிலாளர்கள் 2000பேருக்கு உதவிய நடிகை...

வெளிமாநிலங்களிலிருந்து வேலைக்காகப் புலம் பெயர்ந்து வெவ்வேறு ஊர்களுக்குத் தொழிலாளர்கள் செல்கின்றனர். அதுபோல் தமிழகத்திற்கும் பீகார், மேற்கு வங்காளம், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களை சேர்ந்தவர்கள் வந்தனர். கொரோனா ஊரடங்கால் அவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியாத நிலை இருந்தது. அவர்கள் தங்கள் ஊர்களுக்கு அரசு அனுமதி கிடைத்தவுடன் ரயிலில் புறப்பட்டுச் சென்றனர். அவர்களுக்கு நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது சமூக சேவை அமைப்பு சேவ் சக்தி (Save Shakti) பவுண்டேஷன் சார்பாகத் தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கி வந்தார்.

இந்நிலையில் நேற்று மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த 2 ஆயிரம் புலம் பெயர் தொழிலாளர்கள் சென்னையிலிருந்து சொந்த ஊருக்குப் புறப்பட்டனர். அவர்கள் அனைவரும் ஊர் சென்று சேரும் வரையிலான உணவு, தண்ணீர், முக கவசம் மற்றும் மருத்துவ பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களை நடிகை வரலட்சுமி சரத்குமார் வழங்கினார்.

நடிகை வரலட்சுமி சரத்குமாரின் தாய் சாயா தேவி மற்றும் சேவ் சக்தி உறுப்பினர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று அனைவருக்கும் உதவிகள் சென்று சேர உதவினார்கள். அதற்கு பாதுகாப்பளித்த சென்னை காவல் துறை, சென்னை மாநகராட்சி, இந்திய ரயில்வே துறை, கவுதம் சந்தர் (Sankalp Beautiful World), மற்றும் சேவ் சக்தி உறுப்பினர் நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது நன்றியைத் தெரிவித்தார்.

More News >>