கவர்ச்சி நடிகையை காக்க வைத்த ராசி கண்ணா.. ரகசியங்களை வெளியிட திட்டம்?

தெலுங்கு படத்தில் மட்டுமே நடித்து வந்த ராசிகண்ணா இமைக்கா நொடிகள் மூலம் தமிழுக்கு வந்தார். அடங்க மறு, அயோக்கியா படங்களில் நடித்தவர் தற்போது அரண்மனை 3. அருவா, சைத்தான் கா பச்சா ஆகிய படங்களில் நடிக்கிறார். தற்போதைய கவர்ச்சி நடிகை ஒருவரை இவர் மணிக்கணக்கில் காக்க வைத்து மன உளைச்சல் ஏற்படுத்திய சம்பவம் பற்றி வெளியாகி இருக்கிறது.

ராம் கோபால் வர்மா நேக்ட் நங்க நக்னம் என்ற படம் இயக்கி உள்ளார். அதில் நடித்திருப்பவர் ஸ்வீட்டி . இவரது நிஜப் பெயர் ஸ்ரீ ரபக்கா. தெலுங்கில் ராம் கோபால் வர்மா இயக்கி இருக்கும் நேகட் வெப் சீரிஸில் படுகவர்ச்சியாக நடித்துப் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். இவர் நடிகை ஆவதற்கு முன் சில நடிகைகளுக்கு உதவியாளராக பணியாற்றி இருக்கிறார். அந்த நடிகைகளுடனே பல நாட்கள் உடனிருந்து வேலைகள் செய்திருக்கிறார். தற்போது ஸ்வீட்டி டோலிவுட்டில் படு சூடான நடிகை என்று பாப்புலர் ஆகியுள்ளார். இவர் தனக்கு நடந்த சில அவமதிப்புகளை வெளியிட உள்ளதாகக் கூறி வந்தார். தற்போது ராசி கண்ணா பற்றிக் கூறியிருக்கிறார்.

கடந்த 2006ம் ஆண்டு சுப்ரீம் என்ற தெலுங்கு படத்தில் ராசிகண்ணா ஹீரோயினாக நடித்தார். அப்போது நடன காட்சி ஒன்றுக்காகச் சேலை கட்டி விட வேண்டும் உடனே வா என்று அதிகாலை 3 மணிக்கு அழைத்தார். நானும் அவசரமாகப் புறப்பட்டு சென்றேன் அதிகாலை நேரத்தில் நான் வருவதைப் பார்த்த நடன இயக்குனர் , இவ்வளவு காலையில் ஏன் வந்தாய் என்று கேட்டார். நான் விஷயத்தைக் கூறியபோது, இங்குதான் இத்தனை பெண்கள் இருக்கிறார்களே அவர்கள் சேலை கட்டிவிடமாட்டார்களா? என்றார்.

பின்னர் ராசி கண்ணாவைப் பார்க்கச் சென்றேன் அவர் என்னைப் பல மணி நேரம் காக்க வைத்தார். இந்தச் சம்பவம் எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியது என்றார். ஸ்வீட்டி தனக்கு நேர்ந்த அனுபவங்களைச் சொல்லும்படி சில சேனல்காரர்கள் அவரை பண ஆசை காட்டி கேட்டு வருகிறார்களாம் அவர் ஓப்பானாகப் பேச ஆரம்பித்தால் பல நடிகைகளின் அந்தரங்கம் அம்பலத்துக்கு வரும் என்று கூறப்படுகிறது.

More News >>