தமிழகத்தில் முழு ஊரடங்கு.. அனைத்து கடைகளும் மூடல்.. வெறிச்சோடிய சாலைகள்..

தமிழகத்தில் இன்று(ஜூலை12) முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அனைத்து கடைகள், வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. பஸ், ரயில் உள்பட அனைத்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. சீன வைரஸ் நோயான கொரோனா, உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. தமிழகத்தில் இந்நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காகக் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. பல மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால், கடந்த ஜூன் 19-ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. பால், காய்கறி, மளிகை, மருந்துக் கடைகள் மட்டும் திறக்கப்படுகிறது. இந்த ஊரடங்கு உத்தரவு ஜூன் 31ம் தேதி வரை அமல்படுத்தப்பட உள்ளது. இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழகம் முழுவதும் கடைகளும் அடைக்கப்பட்டு முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என அரசு அறிவித்திருந்தது. அதன்படி, இன்று தளர்வு இல்லா முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மளிகைக் கடைகள், உணவகங்கள் உள்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. எனினும், வீடுகளுக்குப் பால், செய்தித்தாள் விநியோகிக்கப்பட்டது. மருந்துக் கடைகள் மட்டும் திறந்திருக்கின்றன. மேலும், பஸ், ரயில், ஆட்டோ, டாக்ஸி உள்பட அனைத்து போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு காரணமாக முக்கிய சாலைகளில் தடுப்புகள் வைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். சில இடங்களில் இருசக்கர வாகனங்களில் சென்றவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர். சென்னை உள்பட முக்கிய நகரங்களில் போக்குவரத்து குறைந்து சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
More News >>