ஆசிய வில்வித்தையில் வித்தை காட்டிய இந்தியப் பழங்குடியின மாணவன்!

ஆசிய வில்வித்தைப் போட்டியில் இந்தியப் பழங்குடியன் மாணவன் ஒருவன் சாம்பியன்ஷிப் வென்றுள்ளது நாடு முழுவதும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

பாங்காக் நகரில் சமீபத்தில் ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியில் இந்தியாவிலிருந்து சென்ற குழுவில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு மாணவன் வென்றுள்ளான்.

ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஜ்நகர் பகுதியைச் சேர்ந்த மாணவன் கோரா. புராணங்களில் வரும் ஏகலைவன் போல் காடு மேடுகளில் தன் சுய ஆர்வத்தால் கற்றுக்கொண்டு இன்று ஆசியப் போட்டிகளில் கலக்கி வருகிறான்.

தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்பதன் மூலம் ஒரு ஸ்பெஷல் கோச் கோராவுக்காக நியமிக்கப்பட்டுள்ளார். ஆசியப் போட்டிகளில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் 2020-ம் ஆண்டு டோக்யோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் வில்வித்தைப் போட்டியில் பங்கேற்கத் தேர்வாகியுள்ளார்.

More News >>