ரஜினி நடிகையின் 8 வருட கொண்டாட்டம் எது தெரியுமா? வீடியோ வெளியிட்டு பதில்..

ரஜினிகாந்த் நடிப்பில் மோஷன் கேப்சர் படமாக 3டியில் உருவானது கோச்சடையான். இதில் தீபிகா படுகோனே ஹீரோயினாக நடித்திருந்தார். ஆனாலும் ரஜினி, தீபிகா இருவருமே ஒரிஜினலாக திரைக்குப் பின்னால் நடித்திருந்தாலும் திரையில் அவர்களின் நிஜ உருவம் தெரியாமல் அனிமேஷனாகவே தெரிந்தது ரசிகர்களுக்கும் தீபிகாவை முதன் முறையாகத் திரையில் பார்க்கலாம் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கும் ஏமாற்றம் ஏற்பட்டது. அதன் பிறகு தமிழ்ப் படம் எதுவும் அவர் நடிக்கவில்லை.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கில் ஒரு கொண்டாட்டம் போட்டிருக்கிறார். அதாவது 2012ம் ஆண்டு தீபிகா நடித்த காக்டெய்ல் இந்தி படம் வெளியானது. அதன் எட்டு ஆண்டுகள் நிறைவைத் தான் இப்போது கொண்டாடுகிறார். அப்படத்தின் திரைக்குப் பின்னால் நடந்த ருசிகரங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டிருக்கிறார்.வீடியோவில், படத்தின் படப்பிடிப்பில் தீபிகா, டயானா பெண்டி, சைஃப் அலி கான், போமன் இரானி மற்றும் டிம்பிள் கபாடியா உள்ளிட்டோர் அடித்த லூட்டி இடம் பெற்றிருக்கிறது. இந்த கொண்டாட்டத்துக்கு"8 ஆண்டுகள் காக்டெய்ல் என்று தலைப்பிட்டுள்ள தீபிகா, நீங்கள் உயிர்ப்புடன் இருந்த தருணம் உள்ளதா என்றால் ஆம் அதற்கு காக்டெயில் சரியான பதில் " என குறிப்பிட்டிருக்கிறார்.நடிகை டயானா பென்டியும் ஒரு வீடியோவைப் பகிர்ந்து கொண்டார், "இது எங்கிருந்து தொடங்கியது ... என் வாழ்க்கையின் சிறந்த அனுபவங்களில் ஒன்றை எனக்குக் கொடுத்ததற்காக நன்றி என அவர் தெரிவித்திருக்கிறார்.

More News >>