சீன செல்போன்களால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்.. அதிபர் டிரம்ப் பேட்டி..

சீனாவின் தொலைத் தொடர்பு நிறுவனங்களை நம்ப முடியாது. அந்நாட்டு செல்போன்களால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:சீனாவின் தொழில்நுட்பங்கள், தொலைத் தொடர்பு நிறுவனங்களை நம்பவே முடியாது. சீன செல்போன்களால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும். பல நாடுகள் சீனாவின் ஹூவாய் போன்களை பயன்படுத்தப் போவதில்லை என்று கூறியுள்ளன. இங்கிலாந்து நாடும் அதைப் பயன்படுத்த மாட்டோம் என்று அறிவித்திருக்கிறது.

உலக சுகாதார நிறுவனம், சீனாவின் கைப்பாவையாக உள்ளது. அதனால், அதை குற்றம் சொல்வதில் பிரயோஜனம் இல்லை. சீனா திட்டமிட்டு கொரோனா வைரஸ் நோய் குறித்த தகவல்களை மறைத்து, உலக நாடுகளுக்குப் பரப்பியிருக்கிறது. இவ்வாறு டிரம்ப் கூறினார். கொரோனா நோய் குறித்து ஏற்கனவே சீன அதிபர் ஜின்பிங்கிடம் பேசினீர்களே, மீண்டும் பேசுவீர்களா என்று நிருபர்கள் கேட்டதற்கு, அவருடன் பேச மாட்டேன் என்று டிரம்ப் பதிலளித்தார்.கொரோனா வைரஸ் நோயைச் சீனா திட்டமிட்டுப் பரப்பி விட்டதாக டிரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இதைச் சீனா மறுத்து வருகிறது.

More News >>