கந்தசஷ்டி கவசம் பற்றிய அவதூறுக்கு நடிகர்கள் கடும் கண்டனம்..

முருகப்பெருமானின் கந்தசஷ்டி கவசம் பற்றி யாரோ நெட்டில் அவதூறு பரப்பி வீடியோ வெளியிட்டுள்ளனர். இதற்கு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. பிரபல நடிகர் ராஜ்கிரண் அவதூறு பரப்புபவர்களுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:ஒவ்வொரு மனிதனுக்கும், எந்த வகையிலேனும், தனக்குப் பாதுகாப்பு தேடிக்கொள்ள உரிமை இருக்கிறது. அது, அவர்களது சுதந்திரம். முருகப்பெருமானை நம்புவோர்க்கு,"கந்தர் சஷ்டி கவசம்" என்பது,"ஒரு பாதுகாப்பு அரண்". இதை ஆழ்ந்து படித்தால், அறிவியல் பூர்வமான, மனோதத்துவ ரீதியான ஆத்ம பலன்கள் இருக்கின்றன.

இறைவனை நம்பாதோர்க்கு,"நம்பாமை" என்பது, அவர்களின் சுதந்திரம். நம்பிக்கை கொண்டோர்க்கு,"நம்புதல்" என்பது,அவர்களின் சுதந்திரம். இதில், அவரவர் எல்லையோடு அவரவர்கள் நின்று கொள்வது தான், மேன்மையானது.தேவையில்லாமல் மற்றவர் எல்லைக்குள் புகுந்து, விமர்சனம் செய்வதென்பது, மிகவும் கீழ்மையானது...இந்த கொடிய கொரோனா காலகட்டத்தில்,நோயோடும், நோய் பயத்தோடும்,பொருளாதார சீர்கேட்டோடும், உண்ண உணவின்றி கோடிக்கணக்கான நம் மக்கள்தவித்துக்கொண்டிருக்கும் சூழலில்,இப்படி ஒரு பிரச்சினைக்கு தீ மூட்டுவதில்,யாருக்கோ, ஏதோ, உள் நோக்கம்இருப்பதாகவே நினைக்கத்தோன்றுகிறது. இவ்வாறு ராஜ்கிரண் கூறி உள்ளார்.

நடிகர் சவுந்தர்ராஜா வெளியிட்டுள்ள மெசேஜில், பகுத்தறிவு என்ற பெயரில் தமிழ் கடவுள் முருகப்பெருமானை அவதூறாகப் பேசுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன். நாத்தீகம் என்ற பெயரில் பிறர் வழிபாட்டு நம்பிக்கையை இழிவாகப் பேசுவதால் துவேஷம் பெறுமேயன்றி வேறு எதுவும் நிகழாது. ஓம் சரவணபவ என்று தெரிவித்திருக்கிறார்.

More News >>