மனைவியிடம் இருந்து காப்பாற்றுங்கள்! - தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை
ஆண்களை பாதுகாக்க தனிச் சட்டம் இயற்றக்கோரி ஆண்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியது. அப்போது, கட்டிய மனைவி தொல்லையினால் ஆண்டுக்கு 10,000 ஆண்கள் தமிழ்நாட்டில் இறக்கின்றனர் என அதிர்ச்சி தகவலை அளித்த அவர்கள், அதற்கு அரசு விசாரணை ஆணையம் வைக்க வேண்டும், ஆண்களுக்கென்று தனி அமைச்சகம் வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
மேலும், மேலும் பெண் காவல் நிலையங்களில் ஆண்களை தரக்குறைவாக நடத்துகின்றனர், எப்படி பெண்களை விசாரிக்கும்பொழுது பெண் காவலர்கள் இருக்கிறார்களோ, அதேபோல ஆண்களை விசாரிக்கும் பொழுது ஆண் காவலர்கள் இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளனர்.
மேலும் பெண்கள் மத்தியில் ஆண்கள் சந்திக்கும் பிரச்சனைகளை தெரிய வேண்டும் என்பதற்காக இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியதாக தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்க நிர்வாகி ஒருவர் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.