சுரேஷ் பிரபுவுக்கு விமான போக்குவரத்து துறை அமைச்சராக கூடுதல் பொறுப்பு
தெலுங்கு தேசம் எம்.பி. ராஜினாமா செய்துள்ளதால், விமான போக்குவரத்து துறை அமைச்சராக, வர்த்தகத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க ஆந்திர அரசு, மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றது. இதனால், மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால், ஆந்திரப்பிரதேச அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த பாஜக அமைச்சர்கள் இருவர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, விமான போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த அஷோக் கஜபதி ராஜு, மற்றும் விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் மண் அறிவியல் துறை அமைச்சர்க இருந்த ஒய்.எஸ்.சவுத்திரி ஆகியோர் தங்கள் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தனர்.
இந்நிலையில், விமான போக்குவரத்து துறை அமைச்சராக பிரதமர் நரேந்திர மோடிக்கு கூடுதல் பொறுப்பு அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. பிரதமருக்கு ஏற்கெனவே பணியாளர், பொதுமக்கள் குறைபாடுகள், ஓய்வூதியம் மற்றும் அணு சக்தி மற்றும் விண்வெளி துறையின் அமைச்சராக இருப்பதால், அவருக்கு புதிதாக ஒதுக்கப்பட்ட விமான போக்குவரத்து துறையை, மத்திய வர்த்தகத்துறை அமைச்ராக இருக்கும் சுரேஷ் பிரபுவுக்கு ஒதுக்கப்படுவதாக ஜனாதிபதி மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.