கொரோனாவிலும் கோடியில் சம்பளம் பெற்ற நயன்தாரா.. மினி ஷூட்டிங்கில் கொட்டும் வருமானம்..

பிரபல நடிகர்கள் அதிகளவில் விளம்பர படங்களில் நடிப்பதில்லை அப்படியே நடித்தாலும் கோடிகளில் சம்பளம் தந்தால் நடிக்கச் சம்மதிக்கின்றனர். ஆனால் இந்த கொரோனா ஊரடங்கில் படப்பிடிப்பும் இல்லை வருமானமும் இல்லை என்று நட்சத்திரங்களில் பலர் தங்களது பொழுதை இணைய தளத்தில் கழித்து வருகின்றனர்.நடிகை நயன்தாரா தான் கொரோனா ஊரடங்கிலும் கோடிகளில் வருமானம் பார்த்திருக்கிறார்.

புதிதாகச் சலவை லிக்குவிட் விளம்பரம் ஒன்றில் அவர் நடித்திருக்கும் வீடியோ நயன்தாரா டீம் டிவிட்டரில் வெளியாகி இருக்கிறது. விரைவில் இந்த விளம்பரம் வெளியாக இருக்கிறதாம். மாதக் கணக்கில் கால்ஷீட் கொடுத்து நடிக்கும் படங்களை விட நாள் கணக்கில் கால்ஷீட் கொடுத்து நடிக்கும் இதுபோன்ற விளம்பர மினி ஷூட்டிங் மீது மற்ற ஹீரோயின்கள் பார்வையும் திரும்பி இருக்கிறது.நயன்தாரா தற்போது ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் நடிப்பதுடன் மூக்குத்தி அம்மன். நெற்றிக்கண், காத்துவாக்குல ரெண்டு காதல் படங்களில் நடிக்கிறார்.

More News >>