ஆன்மீக சாமி மலையேறிவிட்டார் - ரஜினியை கிண்டல் செய்யும் அமைச்சர் ஜெயக்குமார்
ஆன்மீக சாமி தற்போது மலையேறிவிட்டார் என நடிகர் ரஜினிகாந்த் இமயமலை சென்றது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.
அமைச்சர் ஜெயக்குமார் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொள்ள டெல்லி சென்றார். அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ரஜினியின் இமயமலை பயணம் குறித்து கூறுகையில், ‘ஆன்மீக சாமி தற்போது மலையேறிவிட்டார்’ என்று விமர்சனம் செய்தார்.
முன்னதாக, நடிகர் ரஜினிகாந்த் அரசியல் அறிவிப்பிற்கு பின்னர் முதன்முறையாக இமயமலைக்கு சென்றுள்ளார். இமயமலையில் ஆசிரமம் ஒன்றை கட்டியுள்ள ரஜினி, கடந்த ஆண்டு நவம்பர் இப்போது அங்கு சென்று பார்வையிடவுள்ளார். இமயமலையில் 15 நாட்கள் தங்கவுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
ஏற்கனவே, தான் ஆன்மீக அரசியல் செய்யப்போவதாக கூறியது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. ஆன்மிக அரசியல் என்று கூறியவுடன், நடிகர் ரஜினிகாந்தை பாஜக தான் இயக்குவதாக விமர்சனங்கள் எழுந்தது. தற்போது அவரது இமயமலை பயணமும் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.
For more details please visit : thesubeditor.com