ஐஸ்வர்யாராய்க்கு கொரோனா தொற்றால் நடிகைகள் திகில்.. படப்பிடிப்பில் பங்கேற்க மறுத்த பிரபல ஹீரோயின்..
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் குடும்பத்திற்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஐஸ்வர்யாராயும் தொற்றிலிருந்து தப்பவில்லை. அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஐஸ்வர்யாராய்க்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் பிரபல ஹீரோயின்கள் திகிலில் உள்ளனர். ஷூட்டிங்கில் நடிக்க ஒப்புதல் தந்த நடிகைகள் ஜகா வாங்கி வருகின்றனர். விஜய்யின் துப்பாக்கி, ஜில்லா, அஜீத்தின் விவேகம் போன்ற படங்களில் பிரபல ஹீரோக்களுடன் நடித்திருப்பவர் காஜல் அகர்வால். தற்போது இந்தியன்2, மற்றும் விஜய் 65 படத்தில் நடிக்கிறார். இந்தி நடிகர் ஜான் ஆபிரஹாம் நடித்து வரும் மும்பை சாகா படத்திலும் காஜல் அகர்வால் நடித்து வருகிறார்.
இப்படத்தை சஞ்சய் குப்தா இயக்குகிறார். பிறமா நிலங்களில் ஷூட்டிங்கை நடத்த அனுமதி மறுத்திருக்கும் நிலையில் தெலங்கானா அரசு கொரோனா கட்டுப்பாடுகள் கடைப்பிடித்துப் படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கியுள்ளது. ராமோ ஜிராவ் பிலிம்சிட்டியில் சில இந்தி படங்களின் படப்பிடிப்பு நடக்கிறது. அங்கு மும்பை சாகா படத்தின் படப் பிடிப்பை நடத்தத் திட்டமிட்டிருந்தனர். இதில் காஜல் அகர்வால் உள்ளிட்ட குறைந்தளவு நபர்கள் மட்டும் பங்கேற்க முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் திடீரென கொரோனா பாதிப்பு அதிகரித்ததுடன் ஐஸ்வர்யாராய் உள்ளிட்ட பிரபலங்கள் பாதித்தது சக படக்குழுவையும் காஜல் அகர்வாலையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இதையடுத்து காஜல் அகர்வால், படப்பிடிப்பில் தற்போதைக்கு பங்கேற்க முடியாது. கொரோனா தொற்று குறைந்த பிறகு படப்பிடிப்பில் பங்கேற்பதாகக் கூறினார். அதே போல் மேலும் சிலரும் கூறியதை அடுத்து மும்பை சாகா படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. இதுகுறித்து பட இயக்குனர் சஞ்சய் குப்தா கூறும் போது,தற்போதுள்ள சூழலில் படப்பிடிப்பு தொடங்குவது பொருத்தமானதாக இருக்காது. மேலும் மும்பையிலேயே இதன் படப்பிடிப்பை ஆகஸ்ட் மாதம் 2ம் வாரத்துக்குப் பிறகு தொடங்க திட்டமிட்டுள்ளோம் எனத் தெரிவித்திருக்கிறார்.