100 படங்களில் நடித்த நடிகர் கொரோனா பாதிப்பில் மரணம்..
கன்னட மூத்த நடிகர் ஹுலிவன கங்காதர். இவர் 100க்கும் மேற்பட்ட படங்கள், 150 நாடகங்களில் நடித்திருப்பதுடன் பல கன்னட சீரியல்களிலும் நடித்திருந்தார். உல்டா பால்டா, கிராம தேவதே, பூமி தாயா சோச்சலா மாகா, அப்பு, குரிகலு சர் குரிகலு, மற்றும் சபவேதி போன்ற படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி புகழ் பெற்றார். கொரோனா தொற்று காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டு நடிகர் ஹுலிவானா கங்காதர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 70. இவருக்கு மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.
சில தினக்களுக்கு முன் பிரேமா லோகா என்ற தொலைக்காட்சி சீரியலுக்காக நடிகர் படப்பிடிப்பில் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது. படப்பிடிப்பின் இரண்டாவது நாளில் அவருக்கு லேசான கொரோனா அறிகுறிகள் தென்பட்டது. இதையடுத்து தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். ஆனாலும் மூச்சு விடுவதில் அவருக்குச் சிரமம் ஏற்பட்டது. பெங்களூருவில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப் பட்டார். மருத்துவர்கள் குழு அவருக்குச் சிகிச்சை அளித்தது, ஆனால் சிகிச்சை பலனில்லாமல் வைரஸ் தொற்றுக்குப் பலியானார்.நடிகர் ஹுலிவான கங்காதர் மறைவுக்குக் கன்னட திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.