அஜீத் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்... ரஜினி, விஜய் வீடுகளை தொடர்ந்து பரபரப்பு..

ரஜினிகாந்த், விஜய் வீடுகளைத் தொடர்ந்து அஜீத் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததாகத் தகவல் பரவியது.நடிகர் அஜீத் வீடு ஈஞ்சம்பாக்கத்தில் உள்ளது. அவரது வீட்டில் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது, இதையடுத்து அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இருப்பினும். யாரோ மர்ம நபர் வெடி குண்டு மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

அஜீத் நடிப்பில் கடந்த ஆண்டு நேர் கொண்ட பார்வை திரைக்கு வந்தது, அடுத்து எச்.வினோத் இயக்கத்தில் வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார். கொரோனா ஊரடங்கால் அவர் படப்பிடிப்பில் பங்கேற்காமல் வீட்டிலிருக்கிறார். ஆனால் வெடிகுண்டு மிரட்டல் குறித்த போலீஸ் தரப்பிலிருந்தோ அல்லது நடிகரின் தரப்பிலிருந்தோ அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வரவில்லை. கடந்த வாரங்களில் நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய் வீடுகளுக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக போலீஸுக்கு போனில் மிரட்டல் வந்ததையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் சென்று சோதனை நடத்தினர். அதில் வெடி குண்டு மிரட்டல் வெறும் புரளி என்று தெரியவந்தது.

More News >>