சுஷாந்த் ஆவியுடன் பேசிய அமெரிக்க ஆவி நிபுணர்.. தற்கொலைக்கு முன் நீண்ட வாக்குவாதம்..

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி தற்கொலை செய்து கொண்டு இறந்தார். இது குறித்து மும்பை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சுஷாந்த் ஆவியுடன் பேசியதாக ஆவிகளுடன் பேசும் அமெரிக்காவைச் சேர்ந்த ஆவி ஆராய்ச்சியாளர் ஸ்டீவ் ஹஃப், வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் சுஷாந்த் ஆவியுடன் பிரத்தேயக கருவி மூலம் தொடர்பு கொள்கிறார். இரண்டு முறை பேசிய வீடியோவில் சுஷாந்த் ஆவியுடன் ஸ்டீவ் ஹஃப் பேசுவதும் அதற்கு சுஷாந்த் அளிக்கும் பதில்களும் இடம் பெற்றுள்ளது.

சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் ரசிகர்களின் வேண்டுகோளின் பேரில், சுஷாந்த் ஆவியுடன் பேசியதாகக் கூறுகிறார் அமானுஷ்ய நிபுணர் ஸ்டீவ் ஹஃப்.அந்த வீடியோவையும் ஸ்டீவ் வெளியிட்டுள்ளார்.வீடியோவில் இடம்பெற்றுள்ள உரையாடல் வருமாறு:"நீங்கள் வெளிச்சத்தில் இருக்கிறீர்களா" என்று சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் ஆவியிடம் பேசும் ஹஃப், "நீங்கள் நேற்றிரவு பார்த்த வெளிச்சத்தில் இருக்கிறீர்கள்" என்று கூறுகிறார் அதற்கு சுஷாந்த் ஆவி , "நான் அதில் இருந்தேன்." எனப் பதிலளிக்கிறது ஹஃப் தொடர்ந்து கூறுகிறார், "நான் உங்கள் வேலை பற்றி அறிந்திருக்க வில்லை, ஆனால் நீங்கள் நன்றாக ரசிகர்களால் நேசிக்கப்படுகிறீர்கள், உங்களுக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர், உங்கள் ரசிகர்களிடம் எதையும் சொல்ல விரும்புகிறீர்களா?"......(பதில் இல்லை) ஹஃப் சுஷாந்த் சிங் ராஜ்புத்திடம், "நீங்கள் எப்படி இறந்தீர்கள் என்பது உங்களுக்கு நினைவிருக்கிறதா" என்று கேட்டபோது, ​​"அவர்கள் அனைத்தையும் மருத்துவரிடம் விட்டுவிடுவார்கள், நாங்கள் இறந்து விட்டோம் என்று பதிலளித்தார்.

பின்னர் 2வது வீடியோவில் பேசும் சுஷாந்த் ஆவி,எனக்கும் ஒரு நபருக்கும் நீண்ட வாக்குவாதம் நடந்தது. என்னை அந்த நிலைக்குத் தள்ளினார்கள் என்கிறது. பிறகு நாங்கள் கடவுளை பார்க்கக் காத்திருக்கிறோம் என்கிறார், திடீரென்று குறுக்கிடும் மற்றொரு குரல் இத்துடன் முடிந்தது என்கிறது.இது பற்றி ஸ்டீவ் ஹாப் கூறும்போது,"நான் கடந்த 10 ஆண்டுகளாக இதைச் செய்து வருகிறேன், நான் இந்த சாதனத்தை உருவாக்கியுள்ளேன், நான் பேசியதிலேயே மிகவும் பலமானதாக அன்பு நிறைந்ததாக இந்த ஆவி இருந்தது. சுஷாந்த் ஆவியுடன் மற்றொரு ஆவியும் உள்ளது என்றார்.சுஷாந்த் சிங் ஆவியுடன் பேசும் வீடியோவின் இரண்டு பகுதியையும் ஹஃப் வெளியிட்டிருக்கிறார். இது ஹஃப்பின் யூடியூப் சேனலின் உறுப்பினர்களுக்குக் கிடைக்கிறது.

More News >>