நடிகர் மரணம் தற்கொலையா, கொலையா? பட ஃபர்ஸ்ட் லுக்.. சுஷாந்த் டூப் ஹீரோ ஆனார்..

யார் யாருக்கோ எப்படி எப்படியோ அதிர்ஷ்டம் அடிக்கிறது. சுஷாந்த் மரணம் பாலிவுட்டில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தாலும் அவரது தற்கொலையால் அவரைப் போலவே உருவ ஒற்றுமை உள்ளவருக்கு அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது.சுஷாந்த்தை போலவே உருவ ஒற்றுமை உள்ள சச்சின் திவாரி அடிக்கடி டிக்டாக் வீடியோவில் தனது திறமைகளை வெளிப்படுத்தி வந்தார். அது தற்போது சுஷாந்த் தற்கொலை பற்றிய படத்தில் அவரை ஹீரோவாக்கி இருக்கிறது. suicide or Murder அதாவது தற்கொலை அல்லது கொலை; என்று பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்க் வெளியானது.

இப்படத்தை விஜய் சேகர் குப்தா இயக்குகிறார். வரும் செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்கி இந்த ஆண்டு கிறிஸ்துமஸின் போது வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.சுஷாந்த் தற்கொலை பற்றி மும்பை போலீஸார் வழக்கு பதிவு செய்து இதுவரை 30 பேர்களிடம் விசாரணை நடத்தி உள்ளனர். விசாரணை ஒருபுறம் நடக்கும் நிலையில் தற்கொலை பற்றிய விவாதங்களும் தினசரி நடந்து வருகிறது.

More News >>