தீவிரவாதத்துக்கு யார் காரணம் தெரியுமா?- பிரான்ஸ் அதிபரின் திடுக் பதில்
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், நான்கு நாட்கள் அரசு முறை சுற்றுப் பயணத்துக்காக இந்தியா வந்துள்ளார்.
நேற்று அவர் டெல்லியில் மாணவர்களுக்கு மத்தியில் பேசினார். அப்போது அவர், `இன்று உலகை பெரிதும் பாதிப்பது தீவிரவாதமும் பருவநிலை மாற்றமும் தான். குருகிய எண்ணம் கொண்ட தலைவர்கள்தான் இதற்குக் காரணம். அவர்கள் பேராசைப் பிடித்தவர்களாக இருக்கின்றனர்.
நாம் இணையப் புரட்சிக்கும் பருவநிலை மாற்றத்துக்கும் நடுவில் இருக்கும் காலக்கட்டம் இது. மிகத் தெளிவாகவும் தீர்ககமாகவும் முடிவெடுக்கும் இடத்தில் நாம் இருக்கிறோம்’ என்று பேசி பரபரப்பைக் கூட்டியுள்ளார்.
பருவநிலை மாற்றத்துக்கு உலக தலைவர்கள் சிலரே காரணம் என்று மாக்ரன் பேசியிருப்பது உலக அளவில் கவனம் பெற்றுள்ளது.