`எங்கள் நாடு எரிந்து கொண்டிருக்கிறது..!- ஜெனீவாவில் கொதித்தெழுந்த திபெத்திய மக்கள்

சீனாவுக்கு எதிராக திபெத்திய மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ஜெனீவாவில் இருக்கும் ஐ.நா சபைக்கு முன்னர் ஐரோப்பாவைச் சேர்ந்த திபெத்திய மக்கள் பலர் போராட்டம் செய்துள்ளனர்.

திபெத்தை சீனா முழுமையாக ஆக்கிரமித்து விட்ட பின்னரும், அடிமைத்தனத்தை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர் அந்நாட்டு மக்கள். அதற்காக அவர்கள் தொடர்ந்து குரல் கொடுத்தும் வருகின்றனர். சீனாவிலும், இந்தியாவிலும் தங்களது கோரிக்கைகளை வைத்து வந்த திபெத்திய மக்கள் தற்போது சர்வதேச அமைப்புகளின் கதவுகளைத் தட்ட ஆரம்பித்துள்ளனர்.

நேற்று ஜெனீவாவில் இருக்கும் ஐ.நா சபைக்கு முன்னர் ஐரோப்பாவைச் சேர்ந்த திபெத்திய மக்கள் 1000 பேருக்கு மேற்பட்டோர் ஒன்று கூடி சீனாவுக்கு எதிராக கோஷம் எழுப்பியுள்ளனர். மேலும், `எங்கள் நாடு எரிந்து கொண்டிருக்கிறது. திபெத்திய மக்களுக்கு எதிராக சீனா நடத்தும் மனித உரிமை மீறல், பறிக்கப்பட்ட உரிமை குறித்து ஐ.நா சபை சுயாதீன விசாரணை நடத்த வேண்டும்' என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

More News >>