கட்டில் பட பாடல் பதிவுடன் நடந்த இசை அமைப்பாளர் கொண்டாட்டம்..

தமிழில் ஏராளமான படங்களுக்கு இசை அமைத்திருப்பவர் ஸ்ரீகாந்த் தேவா. அவர் தனது பிறந்தநாளைக் கட்டில் படப் பாடல் பதிவு செய்து கொண்டாடினார். இது பற்றி கட்டில் பட இயக்குனர் ஹீரோ இ.வி.கணேஷ்பாபு கூறியதாவது.விஜய் நடித்த சிவகாசி, அஜித் நடித்த ஆழ்வார், மற்றும் எம்.குமரன் சன் ஆஃப் மஹாலட்சுமி போன்ற பல வெற்றிப்படங்களுக்கு இசையமைத்த ஸ்ரீகாந்த் தேவா. எனது கட்டில் திரைப்படத்திற்கு இசை அமைக்கும் பணிகள் இப்போது நடைபெற்று வருகிறது.

ஸ்ரீகாந்த்தேவாவின் பிறந்தநாள், இயக்குனர்கள், நடிகர்கள் உட்பட நூற்றுக்கணக்கான தொழில்நுட்ப கலைஞர்கள் சூழ ஆண்டு தோறும் கோலாகலமாக நடைபெறும். இந்த ஆண்டு கொண்டாட்டங்களைத் தவிர்த்து எளிமையாக எனது கட்டில் திரைப்படப் பாடல் பணிகளுக்கிடையே நடைபெற்றது.இவரது இசையில் கவிப்பேரரசு வைரமுத்து மற்றும் மதன் கார்க்கி எழுதிய கட்டில் படப்பாடல் தனித்தன்மையுடன் உருவாகி எல்லோரின் மனதையும் கொள்ளையடிக்கும் என்பது உறுதி.கொரானாவிலிருந்து மீண்டு சினிமா உட்பட உலகின் அனைத்து தொழில்களும் புதிய உற்சாகத்துடன், புதிய வேகத்துடன் முன்பை விட பலமடங்கு வீரியத்துடன் விஸ்பரூபம் எடுத்து புதிய பரிமாணத்தில் பயணிக்கும் என்பது உறுதி.

இவ்வாறு இ.வி.கணேஷ்பாபு கூறினார்.

More News >>