நடிகர் திலகம் சிவாஜி 19வது ஆண்டு நினைவு நாள்.. பட அதிபர் எஸ். தாணு, ராம்குமார், பிரபு அஞ்சலி..

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்ற தமிழ் திரையுலகின் சகாப்தம் மறைந்து 19 ஆண்டுகள் ஆகிறது. அவரது நினைவு தினம் இன்று. பராசக்தி படத்தின் மூலம் திரைவாணை கிழித்துக்கொண்டு உதித்த அந்த இமயம் சினிமாவில் ஏற்காத வேடம் இல்லை, பேசாத வசனம் இல்லை. வீரபாண்டிய கட்ட பொம்மன். ராஜ ராஜ சோழன். கர்ணன், சேக்க்ஷ்பியர்,கப்பலோட்டிய தமிழன் என நாம் பார்க்காத சரித்திர புராண கதாபாத்திரங்களில் நடித்து அவர்கள் எல்லாம் சிவாஜி போல் தான் இருந்திருப்பார்கள் என்று நம் எண்ணத்தில் பதிய வைத்தவர் . மன்னர் என்றால் மன்னர், சேவகன் என்றால் சேவகன், போலீஸ் அதிகாரி என்றால் அதிகாரி என வாழ்ந்து காட்டியவர். தமிழ் திரையுலகின் என்சைக்லோபோடியா. நடிப்பில் யாருக்காவது சந்தேகம் என்றால் சிவாஜி என்ற அகராதியைப் புரட்டிப் பார்த்தால் தீர்ந்துவிடும் சந்தேகம்.

சிவாஜி என்ற நடிப்பு மகானுக்கு செவாலியே என்ற வெளிநாட்டுச் சாதனை விருது தேடி வந்தது.எகிப்து அதிபர் கமால் அப்தெல் நாசர் இந்தியாவிற்கு வருகை தந்த போது, அப்போதைய இந்தியப் பிரதமர், ஜவகர்லால் நேரு அனுமதி வழங்கப்பட்ட தனி நபர் சிவாஜி கணேசன் ஆவார். பத்மஸ்ரீ, பத்மபூஷன், தாதாசாகேப் பால்கே,கலைமாமணி போன்ற விருதுகளைப் பெற்றுள்ளார். மெரினாவில் சிவாஜிக்குச் சிலை அமைத்தார் கலைஞர். பின்னர் ஆட்சிக்கு வந்தவர்கள் அவரது சிலையை கோர்ட் மூலம் அகற்றி சென்னை அடையாறு பாலம் அருகே அமைந்துள்ள சிவாஜி நினைவு இல்லத்தில் அந்தச்சிலை கொண்டு சென்று வைத்தனர். சிவாஜி 19வது ஆண்டு நினைவு தினமான இன்றுதி நகரில் உள்ள அவரது வீட்டில் சிறப்புப் பிரார்த்தனை நடந்தது. சிவாஜி மூத்த மகன் ராம்குமார், இளைய மகன் பிரபு மற்றும் குடும்பத்தினர் அவரது உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.சிவாஜி 19வது நினைவு தினமான இன்று அவரது நினைவைப் போற்றி தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு அஞ்சலி மெசேஜ் வெளியிட்டார்.

More News >>