பண்ணை வீட்டில் சூப்பர் ஸ்டார் வாக்கிங்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டிலிருந்தாலும் வெளியில் நடந்தாலும் யார் பார்க்கிறார்களோ இல்லையோ அவரது ரசிகர்கள் அவரை பின்தொடர்ந்த வண்ணமிருக்கின்றனர். லம்போகினி காரை மாஸ்க் அணிந்து அவர் ஓட்டிச் சென்றதைப் படம் எடுத்து பகிர்ந்து அதை வைரலாக்கினர். இன்று அவர் கேளம் பாக்கத்தில் பண்ணை வீட்டில் உள்ள தோட்டத்தில் தூரத்தில் வாக்கிங் செல்வதை வீடியோ எடுத்து பகிர்ந்திருக்கிறார் ஒரு ரசிகர்.

ரஜினியும் கொரோனா ஊரடங்கில் தான் உண்டு தன் வேலை உண்டு என்றில்லாமல் நாட்டு விஷயங்களை வீட்டிலிருந்தே கவனித்து தேவையான விஷயங்களுக்கு குரல் கொடுத்து வருகிறார். 2 மாதங்களுக்கு முன் அமிதாப், ரன்பீர் கபூர் போன்றவர்களுடன் சேர்ந்து கொரோனா விழிப்புணர்வு குறும்படத்தில் நடித்தார். பின்னர் சாத்தான் குளத்தில் தந்தை மகனை போலீஸார் அடித்துக் கொன்ற சம்பவத்தை அறிந்து குற்றம் செய்த போலீஸாரை சத்தியமாய் விடக்கூடாது என்று கண்டிப்பான அறிக்கை வெளியிட்டார். இன்றைய தினம் கந்தசஷ்டி கவசத்தை விமர்சனம் செய்து கருப்பர் கூட்டம் என்ற யூடியூபில் அவதூறாகப் பேசி வீடியோ வெளியிட்டதைக் கடுமையாகக்கண்டித்திருக்கிறார்.

https://youtu.be/8x-8oQbGK2U

More News >>