வனிதா டிவிட்டரை விட்டு வெளியேற இந்த பிரபல நடிகை காரணமா?
நடிகை வனிதா டிவி டெக்னீஷியன் பீட்டர் பால் என்பவரைத் திருமணம் செய்து கொண்டது பெரிய சர்ச்சையாக மாறியிருப்பது இணைய தளத்தையே சூடாக்கி இருக்கிறது. வனிதாவுக்கு மூன்றாவது திருமணம். பீட்டர்க்கு 2வது திருமணம். அதுவும் பீட்டர் பால் முதல் மனைவியிடம் விவாகரத்து பெறாமல் திருமணம் செய்திருப்பது பரபரப்பை இன்னும் கூட்டி உள்ளது. வனிதா திருமணம் பற்றி நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி விமர்சனம் செய்தனர். இதையடுத்து அவர்களுடன் மல்லுக்கு நின்றார் வனிதா. உன் யோக்கியத்தைப் பற்றி எனக்குத் தெரியும் அம்பலப்படுத்துவேன், என்று சொல்லி ஒருமையில் பேசி லட்சுமி ராமகிருஷ்ணனிடம் தகராறு செய்தார். கஸ்தூரியை காமெடி பீஸ் என்று கமெண்ட் செய்தார்.
இந்நிலையில் நேற்று மாலையிலிருந்து வனிதா டிவிட்டர் பக்கத்திலிருந்து வெளியேறிவிட்டார். அவர் டிவிட்டரிலிருந்து வெளியேற நயன்தாரா தான் காரணம் என்று கூறப்படுகிறது. அதாவது சில வருடங்களுக்கு முன் நயன்தாரா பிரபுதேவாவுடன் தொடர்பில் இருந்தார், கமல் வேறு நடிகைகளுடன் தொடர்பில் இருந்தார். அவர்களைப் பற்றிப் பேச இவர்களுக்குத் தைரியமில்லை என்னைப் பேசுகிறார்கள் என டிவிட்டரில் வனிதா குறிப்பிட்டிருந்தார். அது நயன்தாரா ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியது. அவர்கள் வனிதாவைக் கடுமையாகத் தாக்கி மெசேஜ் வெளியிட்டனர். நயன்தாராவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஹேஷ் டேக் உருவாக்கினர். இதையெல்லாம் கண்டு அதிர்ச்சி அடைந்து வனிதா டிவிட்டரிலிருந்து வெளியேறியதாகக் கூறப்படுகிறது.