சூர்யா ரசிகர்களுக்காக ரொமாண்டிக் பாடல், முரட்டு ஃபர்ஸ்ட் லுக்..

சூர்யாவின் பிறந்த நாளான இன்று அவரது ரசிகர்கள், சூர்யா பர்த் டே ஹேஷ் டேக் உருவாக்கி வாழ்த்துகளைக் குவித்து டிரண்டிங் செய்து வருகின்றனர். சூர்யா பிறந்த நாள் அன்று ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது என்று அவர் நடிக்கும் சூரரைப்போற்று டீம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. அதன்படி அப்படத்திலிருந்து சூர்யா அபர்ணா முரளியின் லவ் டுயட் பாடல் வீடியோ வெளியிடப்பட்டிருக்கிறது. காட்டுப் பயலே..என்ற இப்பாடலை ரவுடி பேபி புகழ் தீ பாடியிருக்கிறார். சினேகன் எழுதி உள்ளார். இந்த வீடியோவை ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படத்தைச் சுதா கொங்கரா டைரக்டு செய்திருக்கிறார். இவர் ஏற்கனவே இறுதிச் சுற்றுப் படத்தை இயக்கியவர். அடுத்து சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தை வெற்றிமாறன் இயக்குகிறார். ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் வீரராக நடிக்கும் சூர்யா இதில் இரட்டை வேடம் ஏற்க உள்ளார். இதற்காக ஜல்லிக்கட்டு மாடி பிடி பயிற்சி பெறுகிறார். சூர்யா நடிக்கும் முழு கிராமத்துப் பின்னணியிலான கதையாக இது இருக்கும். அத்துடன் வெற்றி மாறன் இயக்கத்தில் சூர்யா முதன்முறையாக இணைவதால் படத்துக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். அதன் பர்ஸ்ட் லுக்கை எஸ். தாணுவின் வி கிரியேஷன் வெளியிட்டிருக்கிறது. இதையடுத்து ஹரி இயக்கும் அருவா, கவுதம் மேனன் இயக்கும் படம் என வரிசையாகப் படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.புதிய படங்களுக்கான ஆயத்த வேலைகள் ஒரு பக்கம் நடந்தாலும் ஏற்கனவே எப்போது ரிலீஸ் ஆகும் என்று காத்துக் கொண்டிருக்கும் சூரரைப்போற்று படத்தின் தியேட்டர் ரிலீசுக்கான வேலைகளும் நடந்து வருகிறது.

More News >>