லட்சுமி ராமகிருஷ்ணனிடம் மன்னிப்பு கேட்ட பீட்டர் பால் மனைவி..

நடிகை வனிதா, பீட்டர் பால் திருமணத்தை எதிர்த்துக் கடந்த ஒரு வாரமாகவே பல்வேறு சர்ச்சைகள் நடந்த வண்ணமிருக்கிறது. தன்னிடம் விவாகரத்து பெறாமல் பீட்டர் பால் 2வது திருமணம் செய்தது சட்டப்படி தவறு அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பீட்டர் பால் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் வட பழனி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். இந்நிலையில் வனிதா, பீட்டர் பால் திருமணம் பற்றி நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, சூர்யா தேவி விமர்சனம் செய்ததுடன் பீட்டர் பால் முதல் மனைவிக்கு ஆதரவாகப் பேசினர். அவர்களை வனிதா ஒருமையில் பேசி விரட்டினார்.

மேலும் லட்சுமி ராம கிருஷ்ணன், கஸ்தூரி, சூர்யா தேவி ஆகியோர் மீது போலீசில் புகாரும் கொடுத்திருக்கிறார். இதில் சூர்யா தேவி கைதாகி ஜாமினில் விடுதலையானார். இந்நிலையில் பீட்டர் பால் மனைவி எலிசபெத் ஹெலன் இன்று ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார், அதில் லட்சுமி ராமகிருஷ்ணனிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார். அதில் ஹெலன் கூறியிருப்பதாவது: லட்சுமி ராமகிருஷ்ணன் மேடம் , எங்களுக்காக சப்போர்ட் செய்து பேசினார்கள். நாங்கள் சொல்லித் தான் அவர் பேசினார். ஆனால், வனிதா,அவர்களை ரொம்ப தவறாகவும், மட்டமாகவும் தரக்குறைவான வார்த்தைகளைப் பேசி அவரை கஷ்டப்படுத்தி உள்ளார்.நாங்கள் கேட்டுக்கொண்டதால் எங்களுக்காக லட்சுமி ராமகிருஷ்ணன் உதவி செய்தார். அதனால் தான் அவருக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இது எங்களுக்குக் கஷ்டமாக உள்ளது.

நியாயத்திற்காகத் தான் லட்சுமி ராமகிருஷ்ணன் குரல் கொடுத்தார். ஆனால் வனிதா அதைப் புரிந்து கொள்ளாமல் அவரை தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். அவருடைய வயதுக்குக் கூட வனிதா மரியாதை கொடுக்கவில்லை. தரக்குறைவான வார்த்தைகளை அவர் பயன்படுத்தியது எனக்கு ரொம்ப கஷ்டமாக உள்ளது. இதனால் நான் இரண்டு நாட்களாக மனக்கஷ்டத்தில் இருக்கிறேன். நம்மால் தானே அவர்கள் அவமானப்பட்டார்கள் என்று வேதனையாக இருக்கிறது. நான் மிகவும் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தேன் வனிதா இவ்வாறு பேசியதற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அவர் மன்னிப்பு கேட்பாரா என்று எனக்குத் தெரியாது. ஆனால் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு எலிசபெத் ஹெலன் தெரிவித்துள்ளார். இந்த வீடியோவை கஸ்தூரி, லட்சுமி ராமகிருஷ்ணன் தங்களது டிவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளனர். இது தற்போது வைரலாகி வருகிறது.

More News >>