துப்பாக்கிச் சூட்டால் பல்கலைக்கழகம் மூடல்!
அமெரிக்காவின் வெர்ஜீனியா மாகாண பல்கலைக்கழகத்தில் துப்பாக்கி சூடு நிகழ்த்தப்பட்ட சம்பத்தை அடுத்து, பல்கலைக்கழகம் மூடப்பட்டுள்ளது.
சனிக்கிழமை அன்று இரவு அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் நடத்தியதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். .
துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து பல்கலைக் கழகத்தை போலீசார் சுற்றி வளைத்து பல்கலைக் கழகத்தில் உள்ள அனைத்து கதவுகளும் மூடியதாக தெரிகிறது.
இது குறித்து பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், ”வளாகத்தில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. பல்கலைக்கழகம் மூடப்பட்டுள்ளது. இப்பகுதிக்குள் வருவதை தவிர்க்கவும். தொடர்ந்து தகவல்களை பின்பற்றவும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.