சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு ரூ100 அபராதம்.. என்ன காரணம் தெரியுமா?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரண்டு தினங்களுக்கு முன்பு போயஸ் கார்டன் வீட்டிலிருந்து கேளம்பாக்கத்துக்கு ஆடம்பர கார் லம்போர்கினியில் சென்றார். முகத்தில் மாஸ்க் அணிந்து அவரே காரை ஓட்டிச் சென்றார். லயன் இன் லம்போர்கினி என்ற ஹேஷ்டேக்குகள் நெட்டில் வைரலானது. அதே நேரத்தில் இது சர்ச்சையாகவும் மாறி இருக்கிறது.
கேளம்பாக்கம் சென்ற ரஜினி , இ -பாஸ் எடுக்காமல் சென்றதாகவும் சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டியதாகவும் சென்னை மாநகராட்சிக்கும், போக்குவரத்து போலீஸுக்கும் புகார் சென்றது. இ பாஸ் எடுக்காமல் சென்றாரா என்பது குறித்து விசாரிக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.
இந்நிலையில் ரஜினிகாந்த் சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டியதற்காக அவருக்கு 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாக அவரது பெயரில் இணைய தளத்தில் ஒரு ரசீது நகல் வெளியாகி வைரலாகி வருகிறது. ஜூலை 23ம் தேதி அபராதம் செலுத்தியதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.ரஜினிகாந்த் ஊரடங்கில் வீட்டிலிருந்தாலும் தினமும் கிரியா யோகா, உடற் பயிற்சி, நடைப் பயிற்சி மேற்கொண்டு உடலை ஃபிட்டாக வைத்து வருகிறார். சமீபத்தில் கேளம்பாக்கம் பண்ணை வீட்டில் ரஜினிகாந்த் நடைப்பயிற்சி சென்ற வீடியோவும் நெட்டில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இதில் குஷ்பு, மீனா. நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்து வருகின்றனர். இதன் படப்பிடிப்பு பெரும் பகுதி முடிந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. ஊரடங்கு முடிந்த பின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இப்படத்தை முடித்தவுடன் கமல்ஹாசன் தயாரிக்கும் படத்தில் ரஜினிகாந்த் நடிப்பார் என்று கூறப்படுகிறது. இதனை கைதி, மாஸ்டர் படங்களை இயக்கி இருக்கும் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார்.மேலும் ,ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள டிவிட்டர் மெசேஜில் , நான் E - Pass இல்லாம பண்ணை வீட்டுக்குப் போனதை எல்லாரும் உங்க வீட்டுப் பிள்ளையா நினச்சு மன்னிச்சிருங்க எனத் தெரிவித்திருக்கிறார்.