இந்தியாவில் ஒரே நாளில் 49 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு..

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 49 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதித்திருக்கிறது. இதையடுத்து, பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 13.36 லட்சமாக அதிகரித்துள்ளது. இதில் 8.5 லட்சம் பேர் குணம் அடைந்துள்ளனர்.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், உலகம் முழுவதும் பல நாடுகளில் பரவியிருக்கிறது. அமெரிக்காவில்தான் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டில் 41 லட்சத்து 09,603 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு, அதில் ஒரு லட்சத்து 45,376 பேர் பலியாகியுள்ளனர்.

நோய்ப் பாதிப்பில் 2வது இடத்தில் உள்ள பிரேசிலில் 22 லட்சத்து 87,475 பேருக்கு கொரோனா பாதித்த நிலையில், 85,232 பேர் பலியாகியுள்ளனர். அதைத் தொடர்ந்து, 3வது இடத்தில் இந்தியா உள்ளது. இந்தியாவில் 13 லட்சத்து 36,861 பேருக்கு நோய் பாதித்த நிலையில், 31,358 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்தியாவில் நேற்று மட்டும் புதிதாக 48,916 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. இதையும் சேர்த்து 13 லட்சத்து 36,861 பேருக்கு நோய் பாதித்திருக்கிறது. இதில் 8 லட்சத்து 49,431 பேர் குணம் அடைந்துள்ளனர். 4 லட்சத்து 56,701 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

நேற்று மட்டும் 757 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். கொரோனா பலி எண்ணிக்கை 31,358 ஆக அதிகரித்திருக்கிறது.இந்தியாவில் கடந்த ஜனவரி 30ம் தேதி முதலாவதாகக் கேரளாவில் ஒரு மாணவிக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதன்பிறகு, 109 நாள் கழித்து மே 19ம் தேதியன்று கொரோனா பாதிப்பு ஒரு லட்சமானது. அதற்குப் பிறகு 15 நாளில் 2வது லட்சம், 10 நாளில் 3வது லட்சம், 8 நாளில் 4வது லட்சம் என்று வரிசையாகப் பாதிப்பு அதிகரித்து வந்தது. தற்போது 2 நாளில் 12 லட்சத்திலிருந்து 13 லட்சத்தை எட்டியிருக்கிறோம். தினமும் சராசரியாக 50 ஆயிரம் பேருக்குத் தொற்று கண்டறியப்படுகிறது.

More News >>