ரஹ்மானின் இந்தி பட வாய்ப்புகளை தடுக்கும் கூட்டம் அவரே சொன்ன புகாரால் பரபரப்பு..

இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ரோஜா படம் மூலம் தமிழில் அறிமுகமாகி நிறையத் தமிழ்ப் படங்களுக்கு இசை அமைத்தார். பிறகு ரங்கீலா படம் மூலம் அவரை ராம் கோபால் வர்மா இந்தியில் அறிமுகப்படுத்தினார். அந்த பாடல்கள் ஹிட்டாகின. பல்வேறு இந்தி படங்களுக்கு இசை அமைத்தவர் பிறகு ஹாலிவுட் படங்களுக்கு இசை அமைத்தார். ஸ்லம் டாக் மில்லினர் என்ற படத்துக்காக ரஹ்மானுக்கு இரண்டு ஆஸ்கர் விருதுகள் கிடைத்தது.

ஆஸ்கர் கதவைப் பல படங்கள் ஏற்கனவே தட்டி இருந்தாலும் முதன்முறையாக இந்தியாவுக்கு ஆஸ்கர் விருதை பெற்று வந்தவர் என்ற பெருமை ரஹ்மானுக்கு உண்டு. ஆஸ்கர் வாங்கிய பிறகு அவருக்கு இந்தி பட வாய்ப்புகள் வருவது குறைந்து விட்டது. கடந்த மாதம் சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொண்டு இறந்தார். அவர் நடித்த கடைசி படமான தில் பெச்சாரா படத்துக்கு ரஹ்மான் இசை அமைத்திருந்தார். அப்படம் ஒடிடி தளத்தில் நேற்று வெளியாகி வரவேற்பு பெற்றது.இந்தி படங்கள் பற்றி ரஹ்மான் கூறும்போது, சமீபகாலமாக எனக்கு இந்தி படங்களில் இசை அமைக்க வாய்ப்பு வருவதில்லை. எனக்கு வரும் வாய்ப்புகளை அங்கிருக்கும் ஒரு கூட்டம் தடுத்துப் பறிக்கிறது என்று அதிரடியாகக் குற்றச்சாட்டு சுமத்தினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரஹ்மான் தமிழர் என்பதால் இந்தி படங்களில் புறக்கணிக்கப்படுகிறாரா? என்ற கேள்வி எழுத்தது, இது பெரிய விவாதமாக மாறியிருக்கிறது.

இது குறித்து ரஹ்மானின் சகோதரி ரெஹனா கூறும்போது, ரஹ்மான் பற்றி வதந்திகளைச் சிலர் பரப்பி வருகின்றனர். அவர் எப்போதும் லாஸ் ஏஞ்சல்ஸில் தான் இருப்பார், ஹாலிவுட் படங்களில் கவனம் செலுத்துகிறார் என்பார்கள். ஒரு பொய்யை திரும்பத் திரும்ப சொல்லும்போது அதைச் சிலர் நம்புகிறார்கள்.இந்தி படங்களில் உள்ளவர்கள், ரஹ்மானை வைத்து ஏன் படம் செய்கிறீர்கள் இங்கு யார் வேண்டும் என்று சொல்லுங்கள் அந்த இசை அமைப்பாளரை வைத்து படம் செய்யுங்கள் என்ற ஒரு கூட்டம். கூட்டம் இல்ல ரொம்ப பேர் பேசுவதாக அங்கிருந்து வந்த முகேஷ் ரஹ்மானிடம் சொன்னார். அதன்பிறகு தான் இந்த விஷயம் ரஹ்மானுக்குத் தெரிய வந்தது. தமிழன் என்பதால் இல்லை, தென்னிந்தியர்கள் என்பதால் புறக்கணிக்கிறார்கள் என்பது போல் தெரிகிறது என்றார்.

More News >>