பிரபல நடிகை மீது போலீசில் புகார்.. வீடியோவை நீக்குங்கள்..

நடிகை காயத்ரி ரகுராம் தமிழில் சார்லி சாப்ளின், ஸ்டைல், பரசுராம், விசில், விகடன் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். பல படங்களில் டான்ஸ் மாஸ்டராகவும் பணியாற்றி உள்ளார். பின்னர் பா.ஜ கட்சியில் சேர்ந்து அரசியலில் ஈடுபட்டு வருகிறார். காயத்ரி ரகுராமுக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும் அடிக்கடி மோதல் நிகழ்கிறது. இது அவ்வப்போது இணைய தளத்தில் காரசாரமான மோதலாக மாறுகிறது.

இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடிகை காயத்ரி ரகுராம் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தென்சென்னை கிழக்கு மாவட்ட அமைப்பாளர் வக்கீல் பன்னீர்செல்வம் சென்னை போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு ஒன்றைக் கொடுத்தார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது. எங்கள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் ஏழை-எளிய மக்களுக்காகப் பாடு பட்டு வருகிறார்.

சாதி, மத, பேதமின்றி சமூக நீதிக்காகப் போராடி வரும் அவரைப் பற்றி சாதியின் பெயரை அடையாளப் படுத்தியும், மதத்தை அடையாளப் படுத்தியும் நடிகை காயத்ரி ரகுராம் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பி வீடியோ மற்றும் ஆடியோ வெளியிட்டு வருகிறார். அவர் மீது சட்ட பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் வெளியிட்டுள்ள வீடியோ மற்றும் ஆடியோக்களை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More News >>