`சீன உளவாளி ஆன சிங்கப்பூர் சிட்டிசன்! - ஆராய்ச்சி மாணவி, சிங்கப்பூர் நபர் கைதால் பரபரப்பாகும் சீன - அமெரிக்க மோதல்

கொரோனா பிரச்சனைக்கு முன் சிறிய அளவில் இருந்த சீன - அமெரிக்க மோதல் கொரோனாவை காரணம் காட்டி மோதல் உச்சத்தை எட்டி வருகிறது. இந்த இரு நாடுகளின் மோதல் உலகநாடுகள் மத்தியிலும் தாக்கத்தை ஏற்படுத்தத் துவங்கியுள்ளது. கொரோனா விஷயத்தில் டிரம்ப்பும் சீனாவும் பகிரங்கமாக மோதியது. அந்தப் பதற்றம் தணிவதற்குள் சில தினங்களுக்கு முன் அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் உள்ள சீன தூதரகத்தை மூடி அமெரிக்க அரசு அதிரடி காட்டியது. அதேநேரம்,சீனாவின் செங்டு நகரில் இருக்கும் அமெரிக்கத் தூதரகத்தை மூடி சீன அரசு அமெரிக்காவுக்குப் பதிலடி கொடுத்தது. மேலும், அமெரிக்காவுக்கு இது தேவையான பதிலடி தான் எனக் கருத்து தெரிவித்தும் சீனா அதிரடி காட்டியது.

நிலைமை இப்படியிருக்க அமெரிக்கா அடுத்த கட்டத்துக்குச் சென்றுள்ளது. சிங்கப்பூர் சிட்டிசன் ஒருவரை தற்போது கைது செய்துள்ளது அமெரிக்க போலீஸ். இந்தக் கைது அமெரிக்கா கொடுத்த விளக்கமோ, ``அமெரிக்காவில் உள்ள தனது அரசியல் ஆலோசனை மையம் மூலம் சீன உளவு அமைப்புகளுக்காகத் தகவல்களைத் திரட்டி அனுப்பினார்" என்பது தான். ஜூன் வீ இயோ என்னும் அந்த நபர் தற்போது சிறைக் கம்பிகளை எண்ணிக் கொண்டிருக்கிறார்.

இந்த நபரைப் போலவே, சீன ராணுவத்துடன் தொடர்பு வைத்து அமெரிக்காவை உளவுப் பார்த்ததாக ஆராய்ச்சி மாணவி ஒருவரையும் கைது செய்துள்ளது அமெரிக்க அரசு. ``அமெரிக்காவிலிருந்து முக்கியமான தகவல்களைத் திரட்ட சீன அரசு இயோவை பயன்படுத்தியுள்ளது. சந்தேகத்துக்கு இடமில்லாமல் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இயோவை வைத்து சீனா தனது கைவரிசையைக் காட்டியுள்ளது" என்று சீனா மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது அமெரிக்கா.

More News >>