பருத்திவீரனில் பாட்டு பாடிய பின்னணி பாடகி வறுமையில் வாடுகிறார்..

கார்த்தி நடித்த முதல்படம் பருத்திவீரன். பிரியாமணி கதாநாயகியாக நடித்திருந்தார். அமீர் இயக்கினார். கிராமத்து பின்னையில் இப்படத்தின் கதை அமைக்கப்பட்டி ருந்தது. இதில், ஊரோரம் புளியமரம் என்ற பாடலைப் பாடியவர் லட்சுமியம்மா. விருது நகர் மாவட்டம் காரியாப்பட்டியை சேர்ந்த இவர் ஆஷ்பெஷ்டாஸ் ஹீட் அமைந்த வீட்டில் வசிக்கிறார். நிறைய விருதுகள் வாங்கி இருக்கிறார். மழை பெய்தால் கூரையிலிருந்து மழைநீர் வழிந்து வீடே வெள்ளக்காடாகிவிடும். வறுமையில் வாடும் இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். அவர்கள் கூலி வேலை செய்து அம்மாவுக்கு சாப்பாடு போடுகின்றனர். பருத்திவீரனுக்கு பிறகு மேலும் சில படங்களில் லட்சுமியம்மா பாடினார். இவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதில் கையிலிருந்த காசெல்லாம் மருத்துவ செலவுக்கே கரைந்துவிட்டது, பின்னர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணம் அடைந்தார். தற்போது மீண்டும் அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. மருத்துவ செலவுக்கு பணமில்லாமல் அவதிப்படுகிறார்.

கொரோனா ஊரடங்கால் வேலையும் இல்லாததால் மகன்களும் வேலைக்கு செல்ல முடியாமல் சிரமத்தில் உள்ளனர். மருந்து வாங்கவும், சாப்பாட்டுக்கும் சிரமம் ஏற்பட்டுள்ளது.இதுபற்றி லட்சுமியம்மாள் கூறும் போது,50 வருஷமாக ஆயிரக்கணக்கில் ஊர் திருவிழாக்களில் பாடி இருக்கிறேன். பருத்திவீரன் படத்தில் பாடிய பிறகு மேலும் சில படங்களில் பாட வாய்ப்பு வந்தது. பிறகு பரவை முனியம்மாவுடன் இணைந்து பாடினேன். ஊர் ஊராக சுற்றி பாடியதில் சரியான நேரத்துக்கு உணவு சாப்பிட முடியவில்லை. ஒடி ஓடி சம்பாத் தித்ததெல்லாம் மருத்துவ செலவுக்கு சென்றுவிட்டது. உச்ச சாயலில் கத்தி பாடியதில் ரத்த குழாயில் பாதிப்பு ஏற்பட்டது, அடைப்பும் ஏற்பட்டிருக் கிறது. இதனால் முன்புபோல் பாட முடிய வில்லை. யாராவது எனது மருத்துவ சிகிச்சைக்கு உதவி செய்தால் நன்றாக இருக்கும். நான் குணமாவேன் என்று லட்சுமியம்மாள் கூறி உள்ளார்.

More News >>