என்னை ஒரு நாயாக கூட மதிக்கவில்லை.. உயிர் பிழைத்து வந்த நடிகர் வேதனை..
By Chandru
ரஜினிகாந்த், கமல்ஹாசன் விஜயகாந்த், சரத்குமார், விஜய், அஜீத், விக்ரம் உள்ளிட்ட அனைத்து நடிகர்களுடனும் சண்டைக்காட்சியில் நடித்தவர் பொன்னம்பலம். இவர் சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். சிகிச்சைக்குப் பணம் இல்லை எனக்கு உதவி செய்யுங்கள் என்று மூக்கில் வென்டிலேட்டர் கருவியுடன் ஆக்ஸிஜன் சுவாசித்தபடி வேண்டுகோள் வைத்து வீடியோ வெளியிட்டார். அறுவை சிகிச்சை முடிந்து தற்போது உடல்நிலை தேறி வந்திருக்கிறார். அவர் அளித்த சிறப்புப் பேட்டியில் கூறியதாவது: பொன்னம்பலம் என்றதும் அவர் ஆஜான பாகு தோற்றம் கொண்டவர் பெரிய ஹீரோக்களுடனெல்லாம் நடித்திருக்கிறார். எப்படியும் 500 கோடி வைத்திருப் பார் என்று நினைப்பார்கள். எனக்கு அவ்வளவெல்லாம் சம்பளம் கிடையாது நாட்டாமையில் எனது சம்பளம் 37 ஆயிரம் ரூபாய். திருமணத்துக்கு முன் சினிமாவில் சம்பாதித்தையெல்லாம் நான் எனது குடும்பம், தங்கைகளுக்குக் கல்யாணம் சீர்வரிசை என்று செலவழித்திவிட்டேன். எனக்கென்று எதுவும் சேர்த்து வைக்க வில்லை. இப்போதும் வாடகை வீட்டில் தான் குடியிருக்கிறேன். திருமணத்துக்கு முன்பு எனக்கு வந்த வருமானம் தொடர்ந்து வரும் என்று நினைத்தேன் அதனால் வந்தவற்றையெல்லாம் குடும்பத்திற்காகச் செலவழித் தேன். சேர்த்து வைக்காதது ஒரு குறை. இப்போது எனக்குச் சம்பாத்தியம் இல்லை என் குடும்பத்தைக் காப்பாற்ற முடிய வில்லை. இருக்கும் கடைசி ஒரு கிராம் தங்கத்தைகூட விற்றுத்தான் எனக்கு வைத்தியம் பார்த்திருக்கிறேன்.எனக்கு உடல்நிலை சரியில்லை என்றதும் தமிழ்நாடு ஆந்திரா, கேரள, கர்நாடகா மற்றும் வெளிநாடுகளிலிருந்து ரசிகர்கள் போன் மூலம் விசாரித்து குணம் அடையப் பிரார்த்தனை செய்வதாகக் கூறினார்கள் அந்த பிரார்த்தனைதான் என்னைக் காப்பாற்றி இருக்கிறது. சுவர் இருந்தால்தான் சித்திரம் எழுத முடியும் அதனால் உடம்பை முதலில் கவனி என்று பார்ப்பவர்களிடமெல்லாம் சொல்வேன் கடைசியில் எனக்கு உடல்நிலை மோசமாகி விட்டது. டாக்டர்கள் எனது உடல் நிலையை நன்கு பார்த்து சிகிச்சை அளித்தனர் அவர்களுக்கு எனது நன்றி. எனது தந்தை இறந்தபிறகுதான் நான் ஸ்டண்ட் நடிகனாக ஆனேன். அந்த காலத்தில் எங்கள் வீட்டில் வறுமை கோரத் தாண்டவம் ஆடியது. சினிமாவுக்கு போகிறேன் என்று சொன்னபோது பொய் சொல்லாதே, திருடாதே இல்லாவிட்டால் சொல் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்ளலாம் என்றார். என் தாய் சொன்னபடி நான் வாழ்கிறேன் அன்றுதான் ஜெய்ஸ்ரீராம் என்றேன் அன்றிலிருந்து இன்றுவரை சொல்லிக் கொண்டிருக்கிறேன். எனக்கு கிட்னி பிராப்ளம் இருப்பதை 5 வருடத்துக்கு முன்பே சொன்னார்கள் அதுபற்றி கேர் செய்யாமல் விட்டுவிட்டேன் அது இவ்வளவு பெரிய பாதிப் பாகும் என்று எண்ணவில்லை. அடுத்த வேளை முருந்து வாங்கிடக் காசு இல்லை என்றபோதுதான் முதலில் சரத்குமார் சாருக்கு போன் செய்து உதவிகேட்டேன் உடனே அவர் டி.சிவாவிடம் போன் செய்து ரூ 50 ஆயிரம் தரச்சொன்னர். அதை வைத்துத்தான் எனக்கு முதல் ஆபரேஷன் நடந்தது. கார்த்தி, விஷால் 20 ஆயிரம் தந்தார்கள். அதை வைத்து மருந்து வாங்கினேன். கமல், ரஜினிசார் நலம் விசாரித்தார்கள். கமல் சார் மருத்துவமனை பில் கட்டுவதாகக் கூறினார். ரஜினி சார் எனக்கு கிட்னி மாற்று ஆபரேஷன் செய்வதாக கூறியிருக்கிறார். அதற்கு இன்னும் 6 மாதத்துக்கு மேல் ஆகும். எனக்கு வீடு இல்லை எனவே தங்குவதற்கு உதவினால் நன்றாக இருக்கும் . என்னைக் கொஞ்சமும் கண்டு கொள்ளாதவர்கள் ஸ்டன்ட் யூனியன் தான். ஐநூறு, ஆயிரம்பேர் இருக்கிறார்கள். ஒருவர் கூட போன் செய்து விசாரிக்கவில்லை. காயத்ரி ரகுராமிடம் கட்சியிலிருந்து உதவ கேட்டேன். அவர் பா.ஜ தலைவர் எல் முருகன் சாரிடம் சொல்லி அடுத்த நாளே எனக்கு இரண்டு லட்சம் கொடுத்து உதவினார். ஸ்டண்ட் யூனியனிலிருந்து உதவி செய்ய வில்லை. என்னை ஒரு நாயாகக் கூட மதிக்க வில்லை. எனக்கு யார் பணமும் வேண்டாம் எனது ரிடையர்மென்ட் பணமாவது தாருங்கள். கொரோனா காலத்தில் பணமும் இல்லாமல் இருந்து நோயாளியாகவும் இருந்ததால் எனக்கு 20 முறை தற்கொலை எண்ணம் வந்தது. விஜய், அஜீத், லாரன்ஸ் போன்றவர்களும் எனக்கு உதவு வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு பொன்னம்பலம் கூறினார்.