கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல தமிழ் ஹீரோ மற்றும் தந்தை..

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் அவரது மகன் அபிஷேக் பச்சன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது போல் தமிழ் சினிமா ஹீரோவும் அவரது தந்தையும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டுள்ளனர்.பிரபல நடிகர் விஷால். இவரும் இவரது தந்தையும், மகாபிரபு போன்ற படங்களை தயாரித்த தயாரிப்பாளருமான ஜி.கே.ரெட்டி இருவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது தெரிய வந்ததை அடுத்து இருவரும் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வந்தனர். அவர்கள் ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கொண்டனர். அதில் இருவரும் தற்போது குணம் அடைந்திருக்கின்றனர் என்று தகவல் வருகிறது.

விஷால் தற்போது சக்கரா படத்தில் நடித்து வருகிறார். சைபர் கிரைம் திரில்லராக இப்படம் உருவாகிறது. ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா, சிருஷ்டி டாங்கே, மனோபாலா, ரோபோ ஷங்கர் ஆகியோர் நடிக்கிறார்கள். எம்.எஸ்.ஆனந்தன் இயக்குகிறார். யுவன்ஷங்கர் ராஜா இயக்குகிறார். கடந்த மாதம் இப்படத்தின் டிரெய்லர் வெளியானது. முன்னதாக துப்பறிவாளன் 2 படத்தில் மிஷ்கின் இயக்கத்தில் நடித்து வந்தார் விஷால், இதன் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் படத்துக்கு பைனான்ஸை கூட்ட வேண்டும் என்று மிஷ்கின் கூற அதற்கு விஷால் மறுக்க இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதையடுத்து மிஷ்கின் அப்படத்திலிருந்து விலகினார். பின்னர் படத்தை இயக்கும் பொறுப்பை விஷாலே ஏற்றுக்கொண்டார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட விஷால் அதிலிருந்து மீண்டது பற்றி டிவிட்டரில் கூறியிருப்பதாவது: எனது தந்தைக்கு கொரேனா தொற்று உறுதியானது. அவருக்கு உதவியபோது எனக்கும் சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் தென்பட்டது. எனது மேலாளருக்கும் இதே நிலை தான் இருந்தது. மூவரும் ஆயுர்வேத மருந்து எடுத்துக்கொண்டோம், ஒரு வாரக் காலத்திற்குள் அபாய கட்டத்தைத் தாண்டிவிட்டோம். தற்போது நலமாக உள்ளோம். மேலும் இந்த தகவலைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இவ்வாறு விஷால் குறிப்பிட்டுள்ளார்.

More News >>