வனிதாவை விமர்சித்த பெண்ணுக்கு கொரோனா தொற்று...

நடிகை வனிதா, பீட்டர் பால் திருமணம் பற்றிக் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாகச் சர்ச்சை நடந்து வருகிறது. நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, மற்றும் சூரியாதேவி உள்ளிட்டவர்கள் வனிதா திருமணத்தை விமர்சித்தனர். இதில் கோபம் அடைந்த வனிதா அவர்களை ஒருமையில் பேசியதுடன் போலீஸில் புகார் அளித்தார். அதில் தன்னைபற்றி இழிவாகப் பேசியதுடன் தனக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் வீடியோ வெளியிட்டுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் படி கேட்டுக்கொண்டார்.

இது தொடர்பாக சூர்யா தேவியைப் பெண் போலீஸார் அழைத்து விசாரணை நடத்தி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அங்கு அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். தற்போது சூர்யா தேவிக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சூர்யா தேவியை விசாரித்த பெண் காவல் ஆய்வாளருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது . இது போலீஸ் வட்டாரத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.சூர்யா தேவியுடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் அவரது விசாரணையின் போது உடனிருந்த போலீஸார் ஆகியோரையும் தனிமைப்படுத்திக்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறதாம்.

ஏற்கனவே வனிதா விவகாரம் தொடர்பாக நடிகை கஸ்தூரியை போலீஸார் விசாரணைக்கு அழைத்த போது தான் கொரோனா தனிமைப்படுத்தலில் இருப்பதாக வனிதா தெரிவித்திருந்தார், இதனால் கஸ்தூரிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறதா என்ற சந்தேகம் எழுந்தது.லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி மீதான புகாரை வனிதா வாபஸ் பெற மறுத்திருப்பதுடன் அவர்களிடம் மன்னிப்பு கேட்கவும் மறுத்துவிட்டார். ஆனால் தஞ்சாவூர் மக்கள் பற்றித் தான் பேசிய பேச்சுக்கு வனிதா பகிரங்க மன்னிப்பு கேட்டு டிவிட்டரில் மெசேஜ் பகிர்ந்திருந்தார்.

More News >>