காத்திருந்த நடிகரின் கல்யாணம் ஸ்டார் ஓட்டலில் நடந்தது.. கொரோனா கட்டுப்பாட்டுடன் டும் டும்..

தெலுங்கு நடிகர் நிதின். ஜெயம் (தெலுங்கு) என்ற படம் மூலம் அறிமுகமானவர். பின்னர் தில், சம்பரம், ஸ்ரீஆஞ்சநேயம், ஸ்ரீனிவாச கல்யாணம், பீஷ்மா போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். நிதின் நடித்த தெலுங்கு படம் ஜெயம் அதேபெயரில் அப்போது தமிழில் ரீமேக் ஆனது அதில் ஜெயம் ரவி ஹீரோவாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. நிதினுக்கும், ஷாலினி என்பவருக்கும் 3 மாதத்துக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

துபாயில் தடபுடலாகத் திருமணம் நடத்தத் திட்டமிடப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடந்தன அதற்காகக் காத்திருந்த நிலையில் கொரோனா ஊரடங்கு அமலானது. இதனால் திருமண திட்டங்கள் தள்ளிவைக்கப்பட்டது. ஊரடங்கு முடிவதுபோல் தெரியாததால் ஐதராபாத்திலேயே ஆடம்பரமாகத் திருமணம் நடத்த முடிவானது. லாக்டவுன் முடியும் என்று பொறுமையாக காத்திருந்தனர். ஊரடங்கு நீடித்துக் கொண்டே போனது. நிதின், ஷாலினி நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் மேலும் திருமணத்தைத் தள்ளிப் போட குடும்பத்தினர் விரும்பவில்லை.

கொரோனா காலத்திலேயே இருவரின் திருமணத்தை நடத்தி முடிக்க முடிவு செய்தனர். ஜூலை 26ம் தேதி திருமணம் நடத்த ஏற்பாடானது. அதன்படி நேற்று திருமணம் நடந்து முடிந்தது. குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் நடந்தது. இருவீட்டுக் குடும்பத்தினர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். ஐதராபாத்தில் உள்ள ஐந்து நட்சத்திர ஒட்டலில் கொரோனா விதிகள் கடைப் பிடிக்கப்பட்டு திருமணம் நடத்தது. தற்போது திருமணப் படங்கள் நெட்டில் வெளியாகி வருகிறது.

More News >>