சிவகார்த்திகேயன் வெளியிட்ட அனிருத் காமெடி வீடியோ..
நடிகர் சிவகார்த்திகேயன் டாக்டர் படத்தில் நடித்து வருகிறார். இதில் பிரியங்கா மோகன் ஹீரோயினாக நடிக்கிறார். வினய், யோகிபாபு, கலையரசு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர் . நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிப்பதுடன் அவரே இப்படத்தையும் தயாரிக்கிறார். சமீபத்தில் இப்படத்தில் அனிருத் பாடும் செல்லம்மா செல்லம்மா பாடல் ரெகார்டிங் வீடியோ வெளியிடப்பட்டது. பாடலுக்கு முன்னதாக அனிருத், சிவகார்த்திகேயன், இயக்குனர் நெல்சன் அமர்ந்து பாடல் எப்படி அமைப்பது என்று பேசுவார்கள் அதில் ஒருவருக்குத் தெரியாமல் ஒருவரைக் கலாய்த்துக் கொள்வதுபோல் காமெடியான உரையாடல் காட்சி அமைக்கப்பட்டது, பாடலுடன் அந்த காட்சிகளும் வெளியாகி வைரலானது. இப்பாடலை சிவகார்த்திகேயன் எழுதினார்.
இன்று பாடலின்போது படமான அனிருதின் இன்னும் சில காமெடி காட்சி வீடியோவை வெளியிட்டிருக்கின்றனர்.கடந்த ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் மிஸ்டர் லோக்கல், நம்ம வீட்டு பிள்ளை, ஹீரோ ஆகிய படங்கள் வெளியாகின இதில் சிவகார்த்திகேயன் படம் ஹிட் ஆனது, மற்ற இரண்டு படங்கள் ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. இந்நிலையில் இந்த ஆண்டில் வெளியாக உள்ள டாக்டர் படத்தை ஹிட் படாமாக்க என்னவெல்லாம் புரமோஷன் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்து வருகிறார். இதையடுத்து சிவகார்த்திகேயனின் அயலான் படம் வெளியாக உள்ளது.