கொரோனாவிலிருந்து மீண்ட ஐஸ்வர்யாராய் நெகிழ்ச்சி..
நடிகர் அமிதாப்பச்சன் அவரது மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய், பேத்தி ஆராத்யா ஆகியோர் கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த வாரம் பாதிக்கப்பட்டனர். 4 பேரும் மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.இந்நிலையில் ஐஸ்வர்யாராயும் , ஆராத்யாவும் கொரோனா தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பினர். ஐஸ்வர்யாராய் கொரோனாவிலிருந்து குணம் அடைந்தது குறித்து டிவிட்டர் பக்கத்தில் மெசேஜ் பகிர்ந்திருக்கிறார்.
அதில்,எனது மகள் தேவதை ஆராத்யா, அப்பா அமிதாப், அபிஷேக் மற்றும் என் மீதும் நீங்கள் அனைவரும் அன்பு செலுத்தி பிரார்த்தனை செய்து அக்கறை காட்டி வாழ்த்துகள் சொன்னதற்கு நன்றி. நான் மிகவும் உணர்ச்சி பெருக்கில் ஆழ்ந்துவிட்டேன். என்றைக்கும் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். உங்கள் அனைவரையும் கடவுள் ஆசிர்வதிக்கட்டும். எப்போதும் நீங்கள் நலமுடன் இருக்க என் அன்பும் பிரார்த்தனையும் இருக்கும் . உங்கள் உண்மையுள்ள, ஐஸ்வர்யாராய். என்றைக்கும் என் இதயம் உங்களுக்காக உருகியிருக்கும். எல்லோரும் நலமுடன் இருங்கள். பாதுகாப்பாக இருங்கள்.இவ்வாறு கூறியுள்ளார்.அமிதாப்பச்சன். அபிஷேக் பச்சன் இருவரும் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.