பிரபல நடிகைக்கு 1.25கோடி கேட்டு சீனியர் நடிகை நோட்டீஸ்..
நடிகை வனிதா, டிவி டெக்னீஷியன் பீட்டர் பாலை 3வதாக திருமணம் செய்தார். இதுபற்றி சீனியர் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் விமர்சனம் செய்தார். பீட்டர் முதல் மனைவி இருக்கும் போது அவர் சம்மதம் இல்லாமல் எப்படி இன்னொரு திருமணம் செய்யலாம் என்று விமர்சித்தார். இதில் கோபம் அடைந்த வனிதா, லட்சுமி ராமகிருஷ்ணன் பற்றி ஒருமையில் பேசி பதிலடி கொடுத்தார். இதற்கிடையில் யூடியூப் சேனலால் ஏற்பாடு செய்யப்பட்ட நேரடி சந்திப்பில் வனிதா, லட்சுமி ராமகிருஷ்ணன் நேருக்கு நேர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதிலும் லட்சுமி ராமகிருஷ்ணனை வனிதா கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தார்.அதைத் தொடர்ந்து லட்சுமி ராமகிருஷ்ணன் வனிதா மீது சட்ட நடவடிக்கைகளைத் தொடங்கி உள்ளார். வனிதாவுக்கு சட்டப்படி வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
மேலும்,வனிதா மீது லட்சுமி ராமகிருஷ்ணன் அவதூறு வழக்குப் பதிவு செய்துள்ளதாக தெரிகிறது, தன்னை அவமானப்படுத்தி விமர்சித்ததற்கு ஒரு கோடியே இருபத்தைந்து லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரியுள்ளதுடன், வனிதா நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் நோட்டீஸில் குறிப்பிட்டிருக்கிறார். நடிகை மற்றும் பிக் பாஸ் புகழ் வனிதா தனது சமூக வலைப் பக்கத்தில் லட்சுமி ராமகிருஷ்ணன் அனுப்பிய வக்கீல் நோட்டீஸை பகிர்ந்துகொண்டு, "நல்ல இதயம் படைத்த சமூக சேவகர் எனக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி மிரட்டுகிறார். ஒரு கோடியே இருபத்தைந்து லட்சம் நஷ்ட ஈடு கேட்கிறார். ஒரு குடும்பத்திற்கு உதவ முயற்சித்ததாகவும், என்னுடைய குடும்ப விவகாரத்தில் அவர் தேவையில்லாமல் தலையிட்டு போலியான ஜட்ஜ்போல் செயல்பட்டார். அதற்கான அதிகாரம் அவருக்கு எதுவும் கிடையாது. அப்பாவிகளின் ரத்தத்தை உறிஞ்சுபவர் என குறிப்பிட்டிருகிறார்.