200 படங்களில் நடித்த பிரபல நடிகர் திடீர் மரணம்..
தமிழில் நிமிர்ந்து நில், தனி ஒருவன், அப்பா, கொடி, தொண்டன், மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் நடித்துள்ளதுள்ளதுடன் ஏராளமான மலையாளம் தெலுங்கு என 200க்கும் மேற்பட்ட படங்களுக்கு மேல் நடித்திருப்பவர் அனில் முரளி. இவர் இன்று மரணம் அடைந்தார். நுரையீரல் பாதிப்பு பிரச்சனை காரணமாக இவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனில்லாமல் இன்று மரணம் அடைந்தார். முதலில் வில்லன் வேடங்களில் தான் அனில் முரளி நடித்து வந்தார். பின்னர் குணசித்ர வேடங்களில் நடித்து வந்தார்.
ஃபொரன்சிக் என்ற மலையாள படத்தில் தான் வில்லனின் தந்தையாக நடித்திருந்தார். அனிலுக்கு மனைவி மற்றும் மகன் ஆதித்யா, மகள் அருந்ததி ஆகியோர் உள்ளனர்.மலையாளத்திலிருந்து தேவன், சுரேஷ்கோபி, ராஜன் பி.தேவ், திலகன், மனோஜ் கே ஜெயன், கலாபவன் மணி, பாபு ஆண்டனி எனப் பல வில்லன் நடிகர்கள் தமிழில் நடித்த புகழ் பெற்றனர். இவர்களில் திலகன். கலாபவன் மணி, ராஜன் பிதேவ் போன்ற நடிகர்கள் ஏற்கனவே மரணம் அடைந்துவிட்டனர்.