காட்டுத் தீயில் சிக்கி பெண்கள் உட்பட 9 பேர் உயிரிழப்பு
தேனி மாவட்டம், குரங்கணி மலைப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி மொத்தம் 9 பேர் உயிரிழந்ததாக, அதிகாரப்பூரவ தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்த விபத்தில் சிக்கி பலர் உயிரிழந்திருப்பதாக வந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், மனவேதனையையும் ஏற்படுத்தியிருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அப்பகுதியில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. காட்டுத் தீயில் சிக்கி காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com