கார் விபத்தில் சிக்கிய நடிகைக்கு எலும்பு முறிவு.. நடிகர் மகளும் படுகாயம்..

கன்னட திரைப்பட இயக்குனர் ராஜேந்திர சிங் பாபு. இவரது மகள் ரோகினி சிங். இவர் ரிசிகா சிங் என்ற பெயரில் கன்னட படங்களில் நடித்து வருகிறார். இவர் கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். இந்த சம்பவம் பற்றிக் கூறப்படுவதாவது: கன்னட நடிகர் ஜக் ஜக்தீஷ் மகள் பிறந்த நாள் விழாவில் பங்கேற்பதற்காக ரிசிகா சென்றிருந்தார் . விழா முடித்து விட்டு காரில் பெங்களூருக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அவருடன் ஜக் ஜக்தீஷின் மற்றொரு மகள் அர்பிதாவும் வந்தார். காரை நண்பர் ஓட்டி வந்தார். எலஹங்கா - மாவல்லிபுரா சாலையில் அதிகாலை வேகமாக வந்த கார் கட்டுப் பாட்டை இழந்து சாலையோர மரத்தில் பயங்கரமாக மோதியது. மோதிய காரின் முன்பகுதி முழுவதும் அப்பளம் போல் நொறுங்கியது.

இதில் ரிசிகா சிங் படுகாயன் அடைந்தார். உடன் வந்த மற்ற இருவரும் படுகாயம் அடைந்தனர். விபத்து நடந்ததை கண்ட அக்கம் பக்கத்தினர் அவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களுக்கு கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது. டாக்டர்கள் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.நடிகை ரிசிகா சிங் கன்னட நடிகர் துனியா விஜய் ஜோடியாக கண்டீவீரா என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். சுதீப் நடித்த மாணிக்யா, ரமேஷ் அரவிந்த் நடித்த கல்லா மல்லா சுல்லா, ரிஷி, காதல் சந்தியா நடித்த பெங்கி பிருகாலி ஆகிய படங்களில் ரிசிகா நடித்துள்ளார். ரிசிகாவுக்கும் பெங்களூரை தொழிலதிபர் சந்தீப் என்பவருக்கும் கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால் அந்த திருமணம் திடீரென்று நிறுத்தப்பட்டது. கடந்த 2 மாதத்துக்கு முன் கன்னட நடிகை ஷர்மிளா மந்த்ரே பெங்களூரில் நடந்த கார் விபத்தில் படுகாயம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News >>