சிதைக்கப்பட்ட ஜெயராஜின் முகம் பென்னிக்ஸின் பின்புறத் தோலை உரித்த கொடூரம் -உறைய வைக்கும் காட்சிகள்
சாத்தான்குளம் சம்பவத்தை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. தந்தை, மகனான ஜெயராஜ், பெனிக்ஸ் இருவரையும் போலீஸார் சித்ரவதை செய்து கொடூரமாகக் கொலை செய்தனர். இந்த வழக்கில் சிபிஐ விசாரணை தொடங்கியுள்ளது. இவர்கள் இருவரையும் காவலர்கள் விடிய விடிய லத்தியால் அடித்ததாகவும் அதில் லத்தி மற்றும் டேபிளில் ரத்தக்கறை படிந்துள்ளதாகவும் அப்போதே கொலையின் கொடூரங்கள் குறித்துப் பேசப்பட்டன. இதனால் சிறையில் அடைத்த சிலமணி நேரங்களிலேயே இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இந்நிலையில்தான், இவர்கள் இருவரும் அனுபவித்த சித்திரவதையை வெளிக்கொணரும்விதமாக புதிய காட்சிகள் வெளியாகியுள்ளன. ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவரின் உடற்கூறு ஆய்வின்போது எடுக்கப்பட்ட காட்சிகள்தான் அவை. மாஜிஸ்திரேட் பாரதிதாசன் முன்னிலையில் அரசு மருத்துவமனையில் நடந்த பிரேதப்பரிசோதனையை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுக்க இதை நக்கீரன் தற்போது வெளியிட்டுள்ளது.அந்த வீடியோயில் தந்தை, மகன் இருவரது பின்புறமும் கொடூரமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பென்னிக்ஸின் பின்புறத்தின் தோல் உரிக்கப்பட்டுள்ளது பார்ப்பவர்களை அச்சத்தில் உறையவைக்கிறது.
பென்னிக்ஸ் உயிருடன் இருக்கும்போது அவரின் பின்புறத் தோல் உரிக்கப்பட்டிருக்கிறது என்றால் எவ்வளவு பெரிய சித்ரவதைகளை இருவரும் அனுபவித்து இருக்கிறார்கள் என்பதை அறியமுடிகிறது. இதேபோல் ஜெயராஜின் முகமும் கொடூரமான முறையில் சிதைக்கப்பட்டிருக்கிறது.பிரேதப் பரிசோதனையின்போது ஜெயராஜின் மருமகன்கள் நீதிபதியுடன் இருக்கிறார்கள். அப்போது இருவரது காயத்தைப் பார்த்து அவர்கள் விம்மி அழுவது பார்ப்பவர்கள் நெஞ்சைக் கரைய வைக்கிறது.
முழு வீடியோவையும் பார்க்க....
https://vimeo.com/443116855