தற்கொலை செய்த நடிகருடன் ஒரு வருடம் வாழ்ந்த நடிகை.. சுப்ரீம் கோர்ட்டில் அவரே வெளியிட்ட பரபரப்பு தகவல்..
கிரிக்கெட் வீரர் தோனி வாழ்க்கை வரலாறு படத்தில் தோனி வேடத்தில் நடித்தவர் இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் . இவர் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து நண்பர்கள், குடும்பத்தினர். படத் தயாரிப்பாளர்கள், காதல் நடிகை ரியா சக்ரபோர்த்தி உள்ளிட்ட 40 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தி உள்ளனர். இந்த வழக்கில் திடீர் திருப்பமாக சுஷாந்த்தின் காதலி நடிகை ரியா சக்ரபோர்த்தி மீது சுஷாந்த் தந்தை பாட்னா போலீஸில் புகார் கொடுத்தார். அதில் சுஷாந்த் தற்கொலைக்கு தூண்டப்பட்டிருக்கிறார். சுஷாந்த்துக்கு ஓவர் டோஸ் மாத்திரைகளை ரியா கொடுத்திருக்கிறார். அவரை அறையில் அடைத்து வைத்து மிரட்டி இருக்கிறார். சுஷாந்தின் கணக்கிலிருந்து 15 கோடி மாயமாகி இருக்கிறது. சுஷாந்த் வங்கிக் கணக்கை ரியா தான் கையாண்டு வந்தார். இது தொடர்பாக ரியாவை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
புகாரின் பேரில் ரியா, மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பாட்னா போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் பாட்னா போலீசில் பதிவு செய்யப்பட்ட வழக்கை மும்பையில் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று ரியா சக்கரவர்த்தி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் ரியா கூறும்போது,சுஷாந்த் சிங் உடன் நான் சுமார் 1 ஆண்டு நான் ஒன்றாக வாழ்ந்து வந்தேன். கடந்த ஜூன் 8 ஆம் தேதி வரை ஒரே வீட்டில் தான் வசித்து வந்தேன். சுஷாந்த் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். இதுகுறித்த விவரங்களை போலீஸ் விசாரணையில் நான் தெரிவித்துள்ளேன்.சுஷாந்த் சிங்கின் வழக்கில் அவரது தந்தை என்னைத் தவறாக இணைத்திருக்கிறார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே எனக்குக் கொலை, பாலியல் வன்கொடுமை மிரட்டல்கள் எனக்கு விடப்பட்டுள்ளது. இதுகுறித்து மும்பை போலீசில் புகார் கொடுத்திருக்கிறேன். எனவே பாட்னாவில் உள்ள வழக்கை மும்பையில் நடத்த உத்தரவிட வேண்டும்.இவ்வாறு ரியா கூறியுள்ளார்.இந்நிலையில் சுஷாந்த் தந்தை கே கே. சிங் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவி யெட் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் ரியா தொடர்ந்த வழக்கு விசாரணையின் போது தன்னிடம் விசாரணை நடத்து முடிவெடுக்கக் கேட்டிருக்கிறார்.