கொரோனா லாக் டவுனில் பிரபல நடிகை கணவருக்கு ஆபரேஷன்..
இந்தி நடிகர் சல்மான்கான் நடித்த படம் மைனே பியார் கியா. 1989ம் ஆண்டு வெளியான இப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இதில் ஹீரோயினாக அறிமுகமானவர் பாக்யஸ்ரீ. முதல் படமே பம்பர் ஹிட் ஆனதால் பாக்ய ஸ்ரீக்கு நிறையப் பட வாய்ப்புகள் தேடி வந்தன. ஆனால் அவர் தேர்வு செய்து குறைந்த எண்ணிக்கையிலான படங்களில் நடித்தார். பின்னர் அவர் ஹிமாலயா தசானி என்பவரை மணந்து இல்லறத்தில் செட்டிலானார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். திருமணத்துக்கு பிறகு பாக்யஸ்ரீ நடிப்பதை குறைத்துக் கொண்டார். பிள்ளைகள் வளர்ந்த நிலையில் இங்கொன்று அங்கொன்றுமாக நடிக்க ஒப்புக்கொள்கிறார்.
தமிழில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடிக்கும் தலைவி படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார் பாக்யஸ்ரீ. மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கையாக இப்படம் உருவாகிறது. கணவர் ஹிமாலயா தசானிக்கு நடந்த ஆபரேஷன் குறித்து பாக்யஸ்ரீ கூறியதாவது:என் கணவருக்குத் துரதிர்ஷ்ட வசமாக ஒரு விபத்து நடந்தது. அதனால் இந்த ஆபரேஷன் நடத்த வேண்டியது அவசியமாக இருந்தது. கோகிலாபென் மருத்துவமனையில் டாக்டர் தின்ஷா பர்திவாலா ஆபரேஷனை வெற்றிகரமாக நடத்தினார். இதற்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி.
கொரோனா ஊரடங்கிலும் இப்படியொரு ஆபரேஷன் நடந்தாலும் கொரோனா வார்டுக்கும் நாங்கள் இருந்த வார்டுக்கும் சம்பந்தமில்லை. கொரோனா வார்ட் மாடியில் தனியாக அமைக்கப்பட்டிருந்தது.தலைவி படத்தில் நான் நடிப்பது பற்றி அறிவிக்க இருந்த நிலையில் லாக்டவுன் வந்துவிட்டது, இல்லாவிட்டால் நாங்கள் நடிக்க வேண்டிய காட்சிகள் சென்னை, ஐதராபாத், மைசூரில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது.
இவ்வாறு பாக்யஸ்ரீ கூறினார்.